செய்திகள் :

மத்திய அரசு அறிமுகம் செய்த Face Wash வெறும் ரூ.47 மட்டுமே; எவற்றுக்குப் பயன்படுத்தலாம் தெரியுமா?

post image

மாறி வரும் உலகில் எப்போதுமே அனைவரும் மிக முக்கியத்துவம் தரும் ஒன்று - 'ஆரோக்கியமான முகப் பராமரிப்பு'.

ஆனால், சந்தையில் விற்கும் பெரும்பாலான பராமரிப்புப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்களால் அந்தப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை.

இந்த நேரத்தில் இந்தியாவின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் பெரும்பாலான மக்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஒளஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் மத்திய அரசு சாலிசிலிக் அமிலம் ஃபேஸ் வாஷ் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

தயாரிப்பு விவரங்கள் மற்றும் விலை

- 1% சாலிசிலிக் அமிலம் ₹ 46.88. இது மேலோட்டமான முகப் பிரச்னைகளை அதாவது முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைத் தீர்க்கும் எனவும்,

- 2% சாலி சிலிக் அமிலம் ₹65.63. இது சருமத்தில் ஆழமாகச் சென்று முகத்தில் இருக்கும் பிரச்னைகளை அதாவது முகப்பருக்கள் போன்றவற்றை தீர்க்கும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

1% சாலிசிலிக் அமிலம் - 2% சாலி சிலிக் அமிலம்
1% சாலிசிலிக் அமிலம் - 2% சாலி சிலிக் அமிலம்

மேலும் இதில் இருக்கும்

- பீட்டா-ஹைட்ராக்ஸி அமிலம் (BHA): சாலிசிலிக் அமிலம் என்பது எண்ணெய்யில் கரையக்கூடிய ஒரு BHA ஆகும். இது தோலின் மேல்பகுதியோடு நிற்காமல், எண்ணெய் சுரப்பிகள் மற்றும் துளைகளின் ஆழம் வரை ஊடுருவுகிறது.

- ஆழமான சுத்தம் (Deep Cleansing): முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை உருவாக்கும் இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான செபம் (Sebum) எனப்படும் முக எண்ணெய்யைக் கரைத்து வெளியேற்றுகிறது.

- பருக்கள் வராமல் தடுத்தல்: தோலின் துளைகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்கிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்

இது மத்திய ரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருந்துகள் மற்றும் மகத்துவ உபகரணங்கள் பணியகம் (PMPI) இதனைச் செயல்படுத்துகின்றனர்.

எனவே

- அனைவருக்கும் தோல் பராமரிப்பு: விலையுயர்ந்த மருத்துவத் தர தோல் பராமரிப்புப் பொருட்களை வாங்க முடியாத மாணவர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு இது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

- உத்தரவாதமான தரம்: உலக சுகாதார அமைப்பின் (WHO-GMP) தரச்சான்றிதழ் பெற்ற ஆலைகளில் தயாரிக்கப்பட்டு, ஆய்வகங்களில் (NABL) பரிசோதிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு வருகிறது.

Face Wash
Face Wash

- திட்ட விரிவாக்கம்: ஜன் ஔஷதி திட்டம் என்பது வெறும் உயிர் காக்கும் மருந்துகள் மட்டுமல்லாமல், தனிநபர் பராமரிப்பு மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

எங்கு வாங்கலாம்?

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஜனஅவஷதி கேந்திரா (Jan Aushadhi Kendra) அல்லது அருகில் இருக்கும் மக்களக மருந்தகங்களில் இதனை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள், பருமனானவர்கள் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?

Doctor Vikatan: என் வயது 65. சர்க்கரை நோய் இருக்கிறது. உடல் பருமனும் உள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசனில் மாம்பழம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டால் என் குடும்பத்தார் மறுக்கிறார்கள். எடை கூடும், சர்க்கரை நோய்... மேலும் பார்க்க

SIMS: ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் - 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை

பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட 84 வயது முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவை சிகி... மேலும் பார்க்க

Doctor Vikatan: பேசும்போது வாயிலிருந்து கெட்ட வாடை.. அவமானம் தரும் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

Doctor Vikatan: என்வயது 70. நான் பேசும்போது வாயில் இருந்து கெட்ட வாடை வருகிறது. எதிரில் உள்ளவர்கள் மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள். அது எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கு வயிற்றில் புண் எதுவும் இல்ல... மேலும் பார்க்க

Doctor Vikatan: 79 வயதில் ஸ்டென்ட்... படி ஏறினால் மூச்சு வாங்குதல்... என்னதான்தீர்வு?

Doctor Vikatan:எனக்கு வயது 79. ஸ்டெனட் வைத்துள்ளேன். வயிறு நிரம்பி இருக்கும்போது நடந்தாலோ, ஒரே ஒரு படிக்கட்டு ஏறினாலோகூடமூச்சு வாங்குகிறது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுக... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி எக்ஸ்-ரே, ஸ்கேன்... புற்றுநோய் வருமா... எத்தனை முறை எடுக்கலாம்?

Doctor Vikatan:எக்ஸ்-ரே (X-Ray) மற்றும் சிடி ஸ்கேன் (CT Scan) எடுப்பதால் உடம்பில் கதிர்வீச்சுப் பாதிப்பு (Radiation) ஏற்படுமா... இதனால் ஒரு நபருக்கு புற்றுநோய் பாதிக்கும் அபாயம் அதிகரிக்குமா... வருடத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் குணமாகாத மலச்சிக்கல்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது.காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்று முழுவதும் வயிறு உப்புசமாக இருக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுகிறேன்... மேலும் பார்க்க