செய்திகள் :

Doctor Vikatan: பேசும்போது வாயிலிருந்து கெட்ட வாடை.. அவமானம் தரும் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

post image

Doctor Vikatan: என்  வயது 70.   நான் பேசும்போது வாயில் இருந்து கெட்ட வாடை வருகிறது. எதிரில் உள்ளவர்கள் மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள். அது  எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கு வயிற்றில் புண் எதுவும் இல்லை. மருத்துவரைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொண்டும்  குணமாகவில்லை. சுகர் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு மாத்திரை சாப்பிடுகிறேன்.  வாய் துர்நாற்றப் பிரச்னையைக் குணப்படுத்த என்னதான் வழி?
-வாசகர் , விகடன் இணையத்திலிருந்து


பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன்.

இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன்

வாய் துர்நாற்றப் பிரச்னையை மருத்துவ மொழியில்  'ஹாலிடோசிஸ்' (Halitosis) என்று  சொல்கிறோம். வாய் துர்நாற்றம் உள்ள நோயாளிகளுக்கு, அது எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய சில விரிவான பரிசோதனைகள் (Investigations) தேவைப்படுகின்றன.

அந்த வகையில் நீங்கள் முதலில் பல் பரிசோதனை (Dental check-up) செய்து பார்த்து பற்கள் மற்றும் ஈறுகளில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். அடுத்து இ.என்.டி பரிசோதனை (ENT check-up) செய்து, மூக்கு, தொண்டை அல்லது சைனஸ் பாதிப்புகள் (Sinusitis) ஏதேனும் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இரைப்பை குடல்  மருத்துவரிடம்  (Gastroenterologist )  ஆலோசனை பெறுவதும் அவசியம். அவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால் வயிற்றுப் பகுதியில் உள்ள பிரச்னைகளை அறிய எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யப் பரிந்துரைப்பார்.

பயாப்ஸி (Biopsy) பரிசோதனையின் மூலம் வயிற்றில் 'ஹெச். பைலோரி' (H. pylori) எனப்படும் பாக்டீரியா தொற்று ஏதேனும் உள்ளதா என்று பார்க்க வேண்டும். டியோடினல் பயாப்ஸி (Duodenal biopsy) செய்து பார்த்து சிறுகுடலின் ஆரம்பப் பகுதியில் பயாப்ஸி செய்வதன் மூலம், ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதில் ஏதேனும் குறைபாடு (Malabsorption) உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

முதலில் பல் பரிசோதனை (Dental check-up) செய்து பார்த்து பற்கள் மற்றும் ஈறுகளில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.


இந்த அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொள்வதன் மூலம்,  உங்களுக்கு வாய் துர்நாற்றம்  ஏற்படுவதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப தகுந்த சிகிச்சையை  அளிக்க முடியும்.

முறையாக பற்களைத் துலக்காமல் இருந்தாலும், பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை, ஃப்ளாசிங் (Flossing)  முறையில் சுத்தம் செய்யாமல் இருந்தாலும் பாக்டீரியாக்கள் எளிதில் வளரும். அதனால் வாய் துர்நாற்றம் வரும். எனவே, வாய் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துங்கள். நீரிழிவு நோய் (Diabetes), சிறுநீரகக் கோளாறுகள் அல்லது கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் மூச்சுக் காற்றில் ஒருவித வித்தியாசமான துர்நாற்றம் வீசலாம். எனவே, அது குறித்தும் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மத்திய அரசு அறிமுகம் செய்த Face Wash வெறும் ரூ.47 மட்டுமே; எவற்றுக்குப் பயன்படுத்தலாம் தெரியுமா?

மாறி வரும் உலகில் எப்போதுமே அனைவரும் மிக முக்கியத்துவம் தரும் ஒன்று - 'ஆரோக்கியமான முகப் பராமரிப்பு'.ஆனால், சந்தையில் விற்கும் பெரும்பாலான பராமரிப்புப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்க... மேலும் பார்க்க

SIMS: ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் - 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை

பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட 84 வயது முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவை சிகி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 79 வயதில் ஸ்டென்ட்... படி ஏறினால் மூச்சு வாங்குதல்... என்னதான்தீர்வு?

Doctor Vikatan:எனக்கு வயது 79. ஸ்டெனட் வைத்துள்ளேன். வயிறு நிரம்பி இருக்கும்போது நடந்தாலோ, ஒரே ஒரு படிக்கட்டு ஏறினாலோகூடமூச்சு வாங்குகிறது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுக... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி எக்ஸ்-ரே, ஸ்கேன்... புற்றுநோய் வருமா... எத்தனை முறை எடுக்கலாம்?

Doctor Vikatan:எக்ஸ்-ரே (X-Ray) மற்றும் சிடி ஸ்கேன் (CT Scan) எடுப்பதால் உடம்பில் கதிர்வீச்சுப் பாதிப்பு (Radiation) ஏற்படுமா... இதனால் ஒரு நபருக்கு புற்றுநோய் பாதிக்கும் அபாயம் அதிகரிக்குமா... வருடத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் குணமாகாத மலச்சிக்கல்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது.காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்று முழுவதும் வயிறு உப்புசமாக இருக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுகிறேன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல்; பிசியோதெரபி மட்டும் போதுமா?

Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து இறங்கும்போது என் பேன்ட் கியரில் மாட்டிக்கொண்டது. இதனால் நான் கீழே விழுந்து, முட்டியில் கடுமையா... மேலும் பார்க்க