செய்திகள் :

பவானி: பிறந்து 14 மணிநேரத்தில் குழந்தையைக் கொன்ற பாட்டி; அதிர்ச்சிப் பின்னணி என்ன?

post image

ஈரோடு மாவட்டம் பவானியைச்‌ சேர்ந்த 25 வயது பிரியதர்ஷினி என்ற பெண்ணிற்கு தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆரோக்கியமாகக் காணப்பட்ட அந்தக் குழந்தை அடுத்த 14 மணிநேரத்தில் இறந்திருக்கிறது. குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிரியதர்ஷினியின்‌ தாய் தங்கமணி என்பவர் பேரக்குழந்தையைக் கொலை செய்ததைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

கைதான தங்கமணி
கைதான தங்கமணி

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "குழந்தையைப்‌ பெற்றெடுத்த பிரியதர்ஷினிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பிரியதர்ஷினியின் கணவர் செல்வக்குமார் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை முறையாகக் கவனிக்காமல் இருந்து வந்திருக்கிறார்.

இரண்டாவதாகப் பிறந்த இந்தப் பெண் குழந்தையையும் வைத்துக்கொண்டு முறையாக வளர்க்க முடியாமல் தன்னுடைய மகள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்ற கவலைப்பட்டுக் கொண்டிருந்த பிரியதர்ஷினியின் தாய் தங்கமணி, யாருக்கும் தெரியாமல் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். அவர்மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

மதுவுக்கு அடிமையான மருமகனால் பெண் குழந்தையை வளர்க்க முடியாது எனப் பாட்டியே கொலை செய்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தருமபுரி : 'அவனைக் காண நானும் செல்கிறேன்' - பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு

பள்ளியில் தன்னுடன் படித்த காதலன் தற்கொலை செய்துகொண்டதால் அதன் துயரம் தாங்காமல் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைதருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; விற்பனையாளர் படுகாயம்! - இருவர் கைது!

மது வாங்க வந்தவர்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்... மேலும் பார்க்க

பெண் ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிக்கு டார்ச்சர் - சக ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மீது வழக்கு!

பயிற்சி பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி உதயகிருஷ்ணா ரெட்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்... மேலும் பார்க்க

சென்னை: தாயைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; போலீஸிடம் சிக்கிய பின்னணி என்ன?

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பாபுலால். இவர் சென்னை பெருங்குடி பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி சென்னிதேவி (43). இந்தத் தம்பதியினருக்கு ராகேஷ் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராகேஷ், பி... மேலும் பார்க்க

சென்னை: ரௌடி அஜய் ஓட ஓட நடுரோட்டில் விரட்டி கொலை; தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலை; என்ன நடந்தது?

சென்னை ஓட்டேரி, எஸ்.வி.எம்.நகரைச் சேர்ந்தவர் பலி ஆடு என்கிற அஜய் (20). இவர் மீது தலைமை செயலக காலணி காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அஜய், நேற்று திருநங்கை ஒருவரை பைக்கில் அழ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: வாங்கிய லஞ்சத்தைத் திருப்பி தர முயன்ற எஸ்ஐ பணியிட மாற்றம்; வைரல் ஆடியோவின் பின்னணி என்ன?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவன், மனைவியைச்சமாதானம... மேலும் பார்க்க