செய்திகள் :

CJP: மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்த சிஜேபி அமைப்பினர் - கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

post image

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா போராட்டக்குழுவை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கும், CJP உறுப்பினர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது.

cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா
cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா

இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சி.ஜே.பி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், ``நானும் மற்றொரு செய்தித் தொடர்பாளரான அசுதோஷ் ரங்காவும் அமைச்சர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் 10 நிமிடங்கள் சந்தித்து எங்களின் கோரிக்கை மனுவை அளித்தோம். நாங்கள் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சமர்ப்பித்துள்ளோம். இதுகுறித்து அமைச்சு மட்டத்தில் பேசுவதாக அவர் எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

தகுந்த உயர் மட்டத்தில் இதுபற்றி விவாதிப்பதாக அமைச்சர் உறுதி அளித்திருந்தாலும், இதுவரை எந்தவொரு இறுதி வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது அமைதியான போராட்டம் தொடரும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் நகலையும் அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ``நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, CBSE 12-ம் வகுப்பு இணையதளக் கோளாறு, CUET தேர்வுத் தாமதம் உள்ளிட்ட தொடர் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சரே நேரடிப் பொறுப்பாவார்.

கல்வி அமைச்சரின் நிர்வாகச் சீர்கேட்டைக் காட்டும் வகையில், இதுவரை எவ்வித கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களோ அல்லது நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. எனவே, அதற்கான ஆவனச் செய்ய வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன?

போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். நேற்று தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வேறு தொடங்கியது. நாடாளு... மேலும் பார்க்க

CJP: ``நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு" - சு. வெங்கடேசன்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடு... மேலும் பார்க்க

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' - முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

'சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்' என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.திமுகவில் ஏற்கனவே வெற்... மேலும் பார்க்க

CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்... மேலும் பார்க்க

`பாஜக-வை கோபப்படுத்தாத நாடாளுமன்ற அரசியலை நோக்கி.!' - திமுக, பாஜக கைகோர்க்குமா?

தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அந்தவகையில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" - ஜெகநாத் மிஸ்ரா

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் ... மேலும் பார்க்க