செய்திகள் :

காவிரி விவகாரம்: ``மாநில உரிமைகளை அடகு வைத்துவிட்டு இன்னும் மௌனம்" - கனிமொழி

post image

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான பிரச்னை சமீபத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு இடையே எழுந்து வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகிற 3-ம் தேதி, இது தொடர்பாக பேச கர்நாடகா செல்வதாக இருந்தது. ஆனால், இப்போதைக்கு விஜய் கர்நாடகா வரவேண்டாம் என்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று பேசியிருக்கிறார்.

விஜய் கத்திபாரா ஆய்வு
விஜய் கத்திபாரா ஆய்வு

கனிமொழி பதிவு

விஜய் கர்நாடகா செல்வதாக இருந்ததற்கும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்தச் சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

"எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம்.

மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு?

டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்".

சமீபத்தில் சென்னை கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை விஜய் ஆய்வு செய்ததை வைத்து தான் கனிமொழி அவரை சாடியுள்ளார்.

``நான் சங்கியா, காங்கிரஸா? இல்லை, நான் இவள்" - சோனம் வாங்சுக்கின் மனைவி பதில்

நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார். அவர் உடல்நி... மேலும் பார்க்க

ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடி மீதான விமர்சனங்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு பதிவு!

ஐதராபாத்தில் மெட்டாவின் இந்திய தலைவர் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன்? சில நாள்களுக்கு முன்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம... மேலும் பார்க்க

விஜய்க்கு நோ சொன்ன சிவக்குமார்; தமிழ்நாட்டிலேயே கிளம்பிய எதிர்ப்பு - என்ன செய்யப் போகிறது தவெக அரசு?

காவிரி நீர், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய், வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா சென்று ந்த மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்துப் பேசவிருப்ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் : `நிபந்தனைகளை மீறினால், உடனடி ரத்து' - செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்!

டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் மற்றும் பார்கள் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவ... மேலும் பார்க்க

தமிழ் கடவுள் டு அஜித்குமார்; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து `அதிரிபுதிரி' பேனர்கள்

முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர்கள்முதல்வர் ரங்கசா... மேலும் பார்க்க