செய்திகள் :

Parithabangal: சர்ச்சையான காணொளி; குறிப்பிட்ட காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம் - பின்னணி என்ன?

post image

'பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் இருந்து வெளிவந்திருந்த 'ஆடி மாத பாவங்கள்' காணொளியில் இருந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் இணையத்தில் சர்ச்சையாகியிருந்தது.

தற்போது அக்காட்சியை மட்டும் 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் டீம் அந்தக் காணொளியில் இருந்து நீக்கியிருக்கிறது.

விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டபோது, அவருடைய மகன் சஞ்சய் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அவரை கேலி செய்யும் வகையில், இந்த 'ஆடி மாத பாவங்கள்' வீடியோவில் கண்டெண்ட் இருப்பதாக சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

Parithabangal Gopi - Sudhakar
Parithabangal Gopi - Sudhakar

முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், "தன் தந்தைக்கு எதிராக நடந்த ஒரு சட்டவிரோதமான செயலுக்குப் பிறகு, தன் வேதனையை வெளிப்படுத்த முயலும் ஒரு சிறுவனை, பரிதாபங்கள் யூடியூப் சேனல் கிண்டல் செய்திருப்பதைப் பார்ப்பதற்கு அருவருப்பாய் இருக்கிறது.

திறமையான கலைஞர்களைக் கொண்ட இந்தக் குழுவின் மிகப்பெரிய ரசிகனாக நான் இருந்திருக்கிறேன்.

ஆனால், ஒரு சிறுவன் வேதனையில் இருக்கும் இந்தச் சமயத்தில் அவனை இப்படிக் கேலி செய்திருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த அருவருப்பாக இருக்கிறது. இதை அவர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்தக் காணொளியில் விமர்சனம் செய்யப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல், "சமீபத்தில் எங்களது சேனலில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி, சமூக வலைதளங்களில் சிலரின் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறோம்.

Parithabangal Explaination
Parithabangal Explaination

அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இருப்பினும், அது சிலரின் மனதைக் காயப்படுத்தியிருப்பதால், அந்தக் காட்சிகளை வீடியோவிலிருந்து நீக்கியுள்ளோம். பரிதாபங்களின் நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல" என அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.

CJP நிறுவனர் அபிஜித்துடன் வீடியோ காலில் பேசிய உத்தவ்; வீட்டுக்கு வருமாறு அழைப்பு!

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே, டெல்லியில் மாணவர்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தி, மத்திய அரசையே இறங்கி வரச் செய்தார். இப்போராட்டத்தால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் த... மேலும் பார்க்க

Hockey: காவி கலருக்கு மாறிய இந்திய ஹாக்கி அணி; சர்ச்சைக்கு விளக்கமளித்த நிர்வாகம்!

இந்திய ஹாக்கி அணி இதுவரை நீல கலர் உடையணிந்துதான் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென அதன் உடை காவி கலருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள எஃப்.... மேலும் பார்க்க

டெல்லி பெண்களுக்கு ரூ.2500 : 3 குழந்தைக்குள் இருந்தால் தகுதி; பணம் கையில் கிடைக்காது!' - முழு விவரம்

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க அறிவித்த தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது அத்திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒ... மேலும் பார்க்க

`அதிக வரன்கள் வருகின்றன; ஆனால் திருமணத்திற்கு மறுக்கிறான்' - CJP அபிஜீத் திப்கே தாயார் சொல்வதென்ன?

காக்ரோச் ஜனதா கட்சி சோசியல் மீடியாவில் தொடங்கி குறுகிய காலத்தில் மாணவர்களின் ஆதரவை பெற்று இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டது. அக்கட்சியின் நிறுவன தலைவர் அபிஜீத் திப்கே அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். ... மேலும் பார்க்க

ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்ட பிரதமர் மோடியின் வீடியோ; மன்னிப்பு கேட்டு விளக்கமளித்த மெட்டா!

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோக்களை பகிர்வதுண்டு. சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டது. இன்று அதிகாலையில், காக்... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதானை தொடர்ந்து அடுத்தகுறி நிதின் கட்கரியா? - எத்தனால் ரூபத்தில் வரும் சிக்கல்!

மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு மோசடி விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்... மேலும் பார்க்க