செய்திகள் :

கிரெடிட் கார்டு, LPG, ITR, தட்கல் - ஆகஸ்ட் மாதத்தில் மாறும் முக்கிய நிதி விதிகள்!

post image

நாளை புதிய மாதம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-க்குள் நடக்க உள்ள நீங்கள் என்னென்ன நிதி நடப்புகள், நிதி மாற்றங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

வருமான வரிக் கணக்குத் தாக்கல்: சம்பளதாரர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்.

ஆனால், தணிக்கை (audit) தேவையில்லாத ITR-3 அல்லது ITR-4 தாக்கல் செய்யும் சுயத்தொழில் செய்பவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் தகுதியுள்ள சிறு வணிகர்கள், ஊக வரித் திட்டத்தைப் (presumptive taxation scheme) பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசித் தேதி ஆகஸ்ட் 31.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் | ITR Filing
வருமான வரிக் கணக்குத் தாக்கல் | ITR Filing

எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு: வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கு, டெபிட் கார்டுகளுக்கு, சேவைகளுக்கு என கட்டணம் வசூலிக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் இந்தக் கட்டணங்கள் மாறுகின்றன.

கிரெடிட் கார்டுகள்: இனி கிரெடிட் கார்டில் நிலுவையில் உள்ள கட்டணங்களுக்கு கூட்டு வட்டி கணக்கிடும் போது, செலுத்தப்படாத சேவைக்கட்டணம், அபராதங்கள் மற்றும் வரிகளை அதில் சேர்க்கக் கூடாது. இது கிரெடிட் கார்டு பில்லிங் முறையை வெளிப்படையாக்கும்.

CKYC 2.0 - இதன் விரிவாக்கம் Central Know Your Customer system ஆகும். இதன் படி, வாடிக்கையாளரின் சம்மதத்துடன் மட்டுமே நிதி நிறுவனங்கள் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முடியும்.

தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், மோசடிகளைக் குறைக்கும்.

ரயில் | தட்கல் டிக்கெட்
ரயில் | தட்கல் டிக்கெட்

தட்கலுக்கு டோக்கன்: நாளை முதல் ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு கடைசி நேரத்தில் வரிசையில் நின்று சிரமப்பட வேண்டாம்.

தட்கல் டிக்கெட் புக்கிங் நேரத்திற்கு முன்பாகச் சென்று, தட்கல் டிக்கெட்டிற்கு டோக்கன் பெற்றுவிட்டால், தட்கல் டிக்கெட் புக் செய்வது சற்று எளிதாகும். இதன் முழு விவரம் இங்கே.

எல்.பி.ஜி சிலிண்டர்: வீட்டு பயன்பாடு, வணிக சிலிண்டர்களின் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் இருக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ITR Filing நாளை கடைசித் தேதி; 'இந்த' தவறுகளை கண்டிப்பாக Avoid பண்ணிடுங்க; இல்லை, ரீஃபண்டில் சிக்கல்!

வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு நாளையே (ஜூலை 31) கடைசி தேதி. ஒருவேளை நாளைக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லையென்றால், தாமதக் கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும். தாமதமாக வருமான வரிக் கணக்... மேலும் பார்க்க

NRI-களே உஷார்! இந்தியாவில் நிம்மதியா ரிட்டயர் ஆக 'இந்த 10' விதிகள் தெரியுமா?

வெளிநாட்டில் சம்பாதிக்கும் வரை கொண்டாட்டம். ஆனால், ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறம்? நீங்க நிம்மதியான ஓய்வுக்காலத்தை அனுபவிக்க இந்த 10 'கோல்டன் ஃபார்முலா'க்களை ஃபாலோ பண்ணாலே போதும்.ரூபாயின் மதிப்பை கணக்க... மேலும் பார்க்க

50 லட்சம் இருந்தா, மாசம் 25,000 ரூபாய் வருமானம் சாத்தியமா?!

நம்ம ஆளுங்களுக்குக் கையில் ஒரு 50 லட்சம் கிடைச்சா உடனே ஓடிப்போய் பேங்க்ல 'பிக்ஸட் டெபாசிட்' (FD) போடுறதுதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்."அப்பாடா, மாசம் மாசம் வட்டி வரும், ஜாலியா வாழலாம்"னு நினைப்போம். 10 வருஷத்த... மேலும் பார்க்க

பங்குச் சந்தை முதலீட்டை நம் மக்கள் தவிர்க்கக் காரணம், பயமா... சரியாகப் புரிந்து கொள்ளாததா?

நான் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். ''பங்குச் சந்தையில் குறிப்பிட்ட சில துறைகள் மிகப் பெரிய அளவில் லாபத்தை அள்ளித் தந்துள்ளன. இந்த உண்மையை உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்'' என்று சொல்லி,... மேலும் பார்க்க

சரியும் சந்தையிலும் லாபகரமான முதலீடு... வழிகாட்டும் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி

எல்லோருக்கும் சம்பள வருமானத்தைத் தாண்டி பணம் சம்பாதிக்கும் ஆர்வம் உள்ளது. நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட, இரு மடங்குக்கு மேல் அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதல் இடத்தில் இருப்பது பங்குச் சந... மேலும் பார்க்க

'இன்னும் 10 நாள்களே' - ITR Filing-ஐ நீங்களே செய்யலாம்? உங்களுக்கான Step by Step Photo Guide

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்னும் கிட்டத்தட்ட 10 நாள்களே பாக்கி உள்ளன. ஏகப்பட்ட வருமானம், முதலீடுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டித் தரும் சொத்துகள் இருப்பவர்கள்... வரிக் கட்ட வேண்டியவர்... மேலும் பார்க்க