செய்திகள் :

ITR Filing நாளை கடைசித் தேதி; 'இந்த' தவறுகளை கண்டிப்பாக Avoid பண்ணிடுங்க; இல்லை, ரீஃபண்டில் சிக்கல்!

post image

வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு நாளையே (ஜூலை 31) கடைசி தேதி.

ஒருவேளை நாளைக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லையென்றால், தாமதக் கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும்.

தாமதமாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் குறிப்பிட்ட நபரின் வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டவில்லை என்றால், தாமதக் கட்டணம் வெறும் ரூ.1,000 மட்டுமே.

இந்த ரூ.1,000, ரூ.5,000 தாமதக் கட்டணத்தைத் தவிர்க்க, நாளைக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவதே நல்லது.

வருமான வரிக் கணக்கு தாக்கல்
வருமான வரிக் கணக்கு தாக்கல்

எப்படி இருந்தாலும், கடைசித் தேதி நீட்டிக்கப்படும் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், இந்த முறை கடைசித் தேதி நீட்டிக்கப்படாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வருமான வரிக் கட்டத் தேவை இல்லாதவர்கள், நீங்களாகவே உங்களுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். அதற்கான வழிமுறையை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் போது பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகள் இவைதான். இந்தத் தவறுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது...

> வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது, சம்பளதாரர்கள் நிறுவனம் தரும் ஃபார்ம் 16 தகவல்களை வைத்து மட்டுமே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவார்கள்.

இந்தத் தவறை அறவே தவிர்த்துவிடுங்கள். சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸ்ட் டெபாசிட், டிவிடெண்ட் வருமானம், வாடகை வருமானம் போன்றவற்றையும் சேர்க்க வேண்டும்... செக் செய்ய வேண்டும்.

AIS, ஃபார்ம் 26AS தகவல்கள் தானாக வருமான வரிக் கணக்குத் தாக்கலில் அப்டேட் ஆகியிருக்கும் தகவல்களோடு ஒத்துப்போகிறதா என்பதை சரிப்பாருங்கள்.

வருமான வரிக் கணக்குத் தாக்கல்
வருமான வரிக் கணக்குத் தாக்கல்

> சரியான ITR ஃபார்மைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். தவறான ஐ.டி.ஆர் ஃபார்மைத் தேர்ந்தெடுத்துவிட்டால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்து முடித்ததே வீணாகிவிடும்.

இது ரீஃபண்ட் நடைமுறையை சிக்கலாக்கும்... தாமதமாகும்.

> பலரும் ஐ.டி.ஆர் சப்மிட் செய்த கையோடு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட்டதாக நினைத்துவிடுகிறார்கள். அது தவறு, வருமான வரிக் கணக்குத் தாக்கலை சப்மிட் செய்த பின், அதை 'Verify' செய்வது மிக மிக அவசியம்.

> வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது, உரிய தகுதிகள் இல்லாமலேயே வரி விலக்குகளைப் பலர் கோருவார்கள். இன்னொரு பக்கம், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், சொத்து பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த மூலதன ஆதாயங்களைக் கணக்கில் காட்டமாட்டார்கள். இந்த இரண்டையுமே கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

> ரீஃபண்ட் செய்யப்படுவதற்கான வங்கிக் கணக்குத் தகவலை Verify செய்ய தவறிவிடாதீர்கள். இதை மறந்தால் ரீஃபண்டில் சிக்கல் ஏற்படும்.

> பான், ஆதார் கார்டு, பெர்சனல் தகவல்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தாலும், வருமான வரிக் கணக்குத் தாக்கலில் தவறுகள் ஏற்படும்.

NRI-களே உஷார்! இந்தியாவில் நிம்மதியா ரிட்டயர் ஆக 'இந்த 10' விதிகள் தெரியுமா?

வெளிநாட்டில் சம்பாதிக்கும் வரை கொண்டாட்டம். ஆனால், ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறம்? நீங்க நிம்மதியான ஓய்வுக்காலத்தை அனுபவிக்க இந்த 10 'கோல்டன் ஃபார்முலா'க்களை ஃபாலோ பண்ணாலே போதும்.ரூபாயின் மதிப்பை கணக்க... மேலும் பார்க்க

50 லட்சம் இருந்தா, மாசம் 25,000 ரூபாய் வருமானம் சாத்தியமா?!

நம்ம ஆளுங்களுக்குக் கையில் ஒரு 50 லட்சம் கிடைச்சா உடனே ஓடிப்போய் பேங்க்ல 'பிக்ஸட் டெபாசிட்' (FD) போடுறதுதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்."அப்பாடா, மாசம் மாசம் வட்டி வரும், ஜாலியா வாழலாம்"னு நினைப்போம். 10 வருஷத்த... மேலும் பார்க்க

பங்குச் சந்தை முதலீட்டை நம் மக்கள் தவிர்க்கக் காரணம், பயமா... சரியாகப் புரிந்து கொள்ளாததா?

நான் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். ''பங்குச் சந்தையில் குறிப்பிட்ட சில துறைகள் மிகப் பெரிய அளவில் லாபத்தை அள்ளித் தந்துள்ளன. இந்த உண்மையை உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்'' என்று சொல்லி,... மேலும் பார்க்க

சரியும் சந்தையிலும் லாபகரமான முதலீடு... வழிகாட்டும் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி

எல்லோருக்கும் சம்பள வருமானத்தைத் தாண்டி பணம் சம்பாதிக்கும் ஆர்வம் உள்ளது. நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட, இரு மடங்குக்கு மேல் அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதல் இடத்தில் இருப்பது பங்குச் சந... மேலும் பார்க்க

'இன்னும் 10 நாள்களே' - ITR Filing-ஐ நீங்களே செய்யலாம்? உங்களுக்கான Step by Step Photo Guide

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்னும் கிட்டத்தட்ட 10 நாள்களே பாக்கி உள்ளன. ஏகப்பட்ட வருமானம், முதலீடுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டித் தரும் சொத்துகள் இருப்பவர்கள்... வரிக் கட்ட வேண்டியவர்... மேலும் பார்க்க

'₹1 கோடி + மாத பென்ஷன்' - 50+ வயதில், Lumpsum முதலீட்டைப் பாதுகாப்பாகச் செய்வது எப்படி?

உங்களுக்கு 50+ வயசா? அல்லது 50-ஐ நெருங்க இருக்கிறீர்களா? பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும்போது, மொத்த பணத்தையும் Lumpsum-ஆக ஒரே நேரத்தில் முதலீடு செய்ய பயமாக இருக்கிறதா? உங்களுக்குத் துணையாக வரப... மேலும் பார்க்க