செய்திகள் :

"சீக்கிரத்தில் அண்ணன் ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார்" - என்ன சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்?

post image

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருகாட்டூர் பகுதியில் சமுதாய நலக் கூடம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் தி.மு.க அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சமுதாய நலக்கூடத்தைத் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், “இந்தக் குருகாட்டூர் பகுதியில் எனக்கு மட்டும் 430-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது. பா.ஜ.கவுக்கு 148 ஓட்டு விழுந்துள்ளது. இந்தத் தொகுதியில் த.வெ.க சார்பில் நின்ற யாரென்றே தெரியாத நபருக்கு 400-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது. முந்தைய தி.மு.க ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக என்னவெல்லாம் செய்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

உங்களுக்காக அனைத்தும் செய்த முதல்வரை மறந்து விட்டீர்கள். என்னை மறந்து விட்டீர்கள். எங்களது கனிமொழி எம்பி-யை மறந்து விட்டீர்கள். என்னைவிட அவருக்குக் குறைவாகத்தான் போட்டு உள்ளீர்கள். ஆனால், என்ன காரணத்திற்காக அவருக்கு இவ்வளவு வாக்குகள் போட்டீர்கள்? பா.ஜ.கவிற்கு ஓட்டுப் போட்டது கூட பரவாயில்லை. ஜோசப் விஜய் என்பவர் முழங்கால் போட்டு நடந்ததற்காக அவருக்காக வாக்கு போட்டீர்களா? நாங்கள் உங்களை ஏமாற்றி விட்டோமா?

இதை நேரில் கேட்பதற்காகவே நான் இங்கு வந்தேன். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஏழை மக்களுக்கு வாரி கொடுத்தார். தனது சொந்த பணத்தைக் கொடுத்தார். ஆனால், தற்போதுள்ள முதல்வர் விஜய் மக்களுக்காக 100 பைசா அதாவது ஒரு ரூபாயாவது தனது சொந்த செலவைச் செய்திருப்பாரா? திருமணத்திற்கு ஒரு பவுன் நகையும், பட்டு சேலையும் கொடுப்பேன் என்று கூறினாரே, அதை நிறைவேற்ற முடிந்ததா?

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

விசிலுக்கு வாக்கு செலுத்தியதால் தற்போது நீங்கள் அனைவரும் இரவில் முழித்து கொண்டே இருக்கிறீர்கள். ஏன் இந்த விசிலுக்கு வாக்கு போட்டோம் என்று மக்கள் கேட்கிறார்கள். சீக்கிரத்தில் அண்ணன் ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார். போன முறைதான் எங்களை ஏமாற்றினீர்கள். இனி வரும் தேர்தலில் உங்களது ஆதரவைத் தர வேண்டும். எங்களை இந்தப் பாடு படுத்தினால் என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலாவது எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று பேசினார்.

பரமத்திவேலுார் அரசு மருத்துவமனை: ரூ. 6 கோடி மதிப்புள்ள கட்டடம் எப்போது திறக்கப்படும்?- மக்கள் கேள்வி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாலப்பட்டி, நன்செய் இடையார், பரமத்திவேலுார், பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்! - DVAC-ன் குற்றச்சாட்டு என்ன?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நேற்று (ஜூலை 29) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ராகுல் vs அமித் ஷா: 'மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷாதான் காரணமா?' - நாடாளுமன்றத்தில் காரசாரம்

நேற்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி vs மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக் காரசார விவாதம் சென்றது. ராகுல் காந்தி vs அமித் ஷா வினாத்தாள் கசிவு சம்பந்தமாக டெல... மேலும் பார்க்க

சென்னையில் முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகம் - Chubb, Nordex, MotiveLink உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள... மேலும் பார்க்க

கைதாகிறாரா செந்தில் பாலாஜி? - டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் த... மேலும் பார்க்க

சமரச டீலிங்; 'கப்சிப்' ஆன அதிரடி அமைச்சர் டு `ஜோசியருக்கே கட்டம் சரியில்லை' | கழுகார்

யோசனையில் தி.மு.க புள்ளி!"எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமா..."மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலிருந்த அ.தி.மு.க மாஜி வைத்திலிங்கம், 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தன் மீது லஞ்ச ஒழிப்பு... மேலும் பார்க்க