செய்திகள் :

The Odyssey: "என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!" - 'தி ஒடிஸி' குறித்து கமல்ஹாசனின் பார்வை

post image

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.

கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை கமல்ஹாசன் பெரிதும் விரும்பிப் பாராட்டுவார்.

The Odyssey Movie
The Odyssey Movie

கடந்த 2018-ம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலனைக் கமல்ஹாசன் நேரில் சந்தித்தபோதுகூட, ஃபிலிமில் எடுக்கப்பட்ட 'டன்கிர்க்' படத்தைச் டிஜிட்டல் வடிவில் பார்த்ததற்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

அத்தோடு, கமல்ஹாசனின் 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் வெர்ஷனை அவருக்கு அனுப்பியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, கமல்ஹாசனின் 'பாபநாசம்' படத்தைப் பார்த்துப் பாராட்டியிருந்தார் நோலன்.

'தி ஒடிஸி' திரைப்படம் வெளியாகி, உலகமெங்கும் வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படத்தை பற்றி பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவை 'தி ஒடிஸி படத்தின் கமல்ஹாசனின் அனுபவம்' எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "ஹோமர் இதை கற்பனையாகக் கண்டார். நோலன் இதைச் செய்ய துணிந்தார். நான் இதைக் கரவொலி எழுப்பிப் பாராட்டுகிறேன்.

சினிமா விரும்பிகளே, இந்த திரைப்படம் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.

'தி ஒடிஸி' திரைப்படம் உலகம் முழுவதும் தனது பிரம்மாண்டப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தத் திரைப்படத்திற்கான எனது பாராட்டு உரை இந்தியத் திரையரங்குகளில் ரசிகர்களைச் சென்றடையும். அதை விரைவில் இங்கேயும் பகிர்ந்துகொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Simran: 10 வயது மாற்றுதிறனாளி சிறுமிக்கு செய்த உதவி! - சிம்ரன் செய்த நெகிழ்ச்சி செயல்

நடிகை சிம்ரன் 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை நேரில் சந்தித்து, அந்த சிறுமியின் கனவை நனவாக்கியிருக்கிறார். பிறக்கும்போதே ஒரு கையுடன் பிறந்து நிஷா, நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர். எதையும் தடையாக நினைத... மேலும் பார்க்க

Raai Lakshmi: "புடவையில் நடித்தாலும் என்னை கிளாமரான நாயகியாகவே பார்க்கிறார்கள்!" - ராய் லக்ஷ்மி

'தர்மபுரி', 'தாம் தூம்', 'காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகை ராய் லட்சுமி. முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இரண்டு ஆண்டுகள் ஓய்வி... மேலும் பார்க்க

Sai Abhyankkar: 'என்னது அதுதான் இதுவா?' - விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த சாய் அபயங்கர்!

'கருப்பு' படத்தில் சூர்யாவுக்கு அதிரடி ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அந்தப் படத்தைத் தாண்டி, தனுஷின் 'ஓம்', 'தமிழ் முருகன்', அல்லு அர்ஜுனின் 'ராக்கா', சூர்யாவின் 48-வது... மேலும் பார்க்க

Anbe Diana: "ஆப்ஷன்கள் இருந்தும் நான்தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருந்தேன்!" - பாரி இளவழகன்

பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ர... மேலும் பார்க்க

Anbe Diana: "யூடியூப் இல்லாமல் நேரடியாக சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல!" - கோபி

பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ர... மேலும் பார்க்க