செய்திகள் :

தூத்துக்குடி: "வேட்பாளரே தெரியாமல் தவெகவுக்கு ஓட்டுப் போட்டது அறியாமை" - அனிதா ராதாகிருஷ்ணன்

post image

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் பூத் வாரியாக திமுக மற்றும் தவெக பெற்ற வாக்குகளைப் பட்டியலிட்டு காட்டி பேசியிருக்கிறார்.

"வேட்பாளரே தெரியாமல் தவெகவுக்கு ஓட்டு போட்டிருக்கிறீர்களே, இது எவ்வளவு பெரிய அறியாமை. எவ்வளவு மாயை, எவ்வளவு மயக்கம். இந்த மக்களுக்காக எங்களுடைய தலைவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

அந்தத் தலைவரை களத்தில் மறந்துவிட்டீர்களே. எங்கள் தளபதியை மறந்துவிட்டீர்களே. எங்கள் எம்.பி கனிமொழியை மறந்து விட்டீர்களே. எனக்கு இந்தப் பூத்தில் 437 ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள். ஆனால் தவெகவில் நின்றவருக்கு 406 ஓட்டு செலுத்தியிருக்கிறீர்கள்.

எங்கள் கட்சிகாரர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டார்களா? எதற்காக தவெகவிற்கு வாக்களித்தீர்கள். இப்படிப் பல்வேறு மாயைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இன்றைய முதல்வர் உங்களுக்கு என்றைக்காவது 1 ரூபாய் கொடுத்திருப்பாரா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எம்.ஜி.ஆர் தனது சொந்த பணத்தை அள்ளிக்கொடுத்தார். ஆனால் இன்று 1 ரூபாய் கூட கொடுக்காதவர் முதலமைச்சராகி இருக்கிறார். யோசித்து பாருங்கள். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனிமேலாவது எங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பேசியிருக்கிறார்.

"சீக்கிரத்தில் அண்ணன் ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார்" - என்ன சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்?

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருகாட்டூர் பகுதியில் சமுதாய நலக் கூடம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் தி.மு.க அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான அனிதா ரா... மேலும் பார்க்க

கைதாகிறாரா செந்தில் பாலாஜி? - டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் த... மேலும் பார்க்க

சமரச டீலிங்; 'கப்சிப்' ஆன அதிரடி அமைச்சர் டு `ஜோசியருக்கே கட்டம் சரியில்லை' | கழுகார்

யோசனையில் தி.மு.க புள்ளி!"எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமா..."மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலிருந்த அ.தி.மு.க மாஜி வைத்திலிங்கம், 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தன் மீது லஞ்ச ஒழிப்பு... மேலும் பார்க்க

மே.வ : முன்னாள் அரசு பஸ் டிரைவர் வீட்டில் திடீர் ரெய்டு! - ரூ.20 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல்

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக முன்னாள் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி தொழிலதிபராக மாறிய மினார்... மேலும் பார்க்க

"பிள்ளைகளுக்கும், மருமகளுக்கும் சமையல் கற்றுகொடுக்க வேண்டும்" - கேரள முதல்வர் பேச்சால் சர்ச்சை

கேரள மாநில முதல்வர் வி.டி.சதீசன் செங்கன்னூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சில தினங்களுக்குமுன் பேசும்போது தாய்மார்களின் சமையல் கைபக்குவம் பற்றி குறிப்பிட்டிருந்தார். "தாய்மார்கள் தங்களின் சமையல் கலை ம... மேலும் பார்க்க