செய்திகள் :

மே.வ : முன்னாள் அரசு பஸ் டிரைவர் வீட்டில் திடீர் ரெய்டு! - ரூ.20 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல்

post image

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக முன்னாள் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி தொழிலதிபராக மாறிய மினார் மொண்டல் என்பவரின் வீட்டில் நேற்று முழுக்க போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். மேற்கு வங்காளத்தின் பிர்பூம் என்ற இடத்தை சேர்ந்த கல் வியாபாரி மற்றும் உள்ளூர் தொழிலதிபர் துலு மொண்டலின் உறவினரான மினார் மொண்டல் வீட்டில் நடந்த ரெய்டில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இரண்டு மாடிகள் கொண்ட வீட்டில் நடந்த ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 16 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ண இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. அதோடு அந்த பணத்தை எடுத்துச்செல்ல டிரங்க் பெட்டிகளும் வரவழைக்கப்பட்டது. இரவு வரை ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டது.

இதில் மொத்தம் 20 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு 16 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. என்ன காரணத்திற்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் மினார் கொண்டல் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அனுப்ரா மொண்டலுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இந்த ரெய்டு குறித்து முதல்வர் சுவந்து அதிகாரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,''மணல் மாஃபியாவை ஒடுக்கியதற்காக சட்ட அமலாக்கப் பணியாளர்களின் பணி பாராட்டத்தக்கது. ஆதாரங்கள் அடிப்படையிலான துல்லியமான நடவடிக்கையைத் தொடர்ந்து, பீர்பூம் போலீசார், சட்டவிரோத மணல் மாஃபியா துலு மொண்டல் என்ற முகமது நஜிபுதீனின் மறைவிடத்தைக் குறிவைத்து ஒரு பெரிய சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கில் பணம், 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு துலு மொண்டல் தனது மகளுக்கு பெங்காலி மற்றும் பாலிவுட் நடிகர்களை அழைத்து ஆடம்பரமான திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த திருமணத்திற்கான மொத்த செலவு ரூ. 100 கோடி என்றும், விருந்தினர் பட்டியலில் பல நடிகர்கள் இடம் பெற்றிருந்தனர்.

கைதாகிறாரா செந்தில் பாலாஜி? - டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் த... மேலும் பார்க்க

சமரச டீலிங்; 'கப்சிப்' ஆன அதிரடி அமைச்சர் டு `ஜோசியருக்கே கட்டம் சரியில்லை' | கழுகார்

யோசனையில் தி.மு.க புள்ளி!"எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமா..."மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலிருந்த அ.தி.மு.க மாஜி வைத்திலிங்கம், 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தன் மீது லஞ்ச ஒழிப்பு... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "வேட்பாளரே தெரியாமல் தவெகவுக்கு ஓட்டுப் போட்டது அறியாமை" - அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் பூத் வாரியாக திமுக மற்றும் தவெக பெற்ற வாக்குகளைப் பட்டியலிட்டு காட்டி பேசி... மேலும் பார்க்க

"பிள்ளைகளுக்கும், மருமகளுக்கும் சமையல் கற்றுகொடுக்க வேண்டும்" - கேரள முதல்வர் பேச்சால் சர்ச்சை

கேரள மாநில முதல்வர் வி.டி.சதீசன் செங்கன்னூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சில தினங்களுக்குமுன் பேசும்போது தாய்மார்களின் சமையல் கைபக்குவம் பற்றி குறிப்பிட்டிருந்தார். "தாய்மார்கள் தங்களின் சமையல் கலை ம... மேலும் பார்க்க

நீட் வினாத்தாள் கசிவு: "ரூ.5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்

மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து கேள்வி எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர்..."ப... மேலும் பார்க்க