செய்திகள் :

`அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறார்' - மதுவில் விஷம்; கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி

post image

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. ஜிக்னேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதாக பிரித்வி அவரின் உறவினர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜிக்னேஷ் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்தார். எனவே ஆஸ்திரேலியாவில் உள்ள ஜிக்னேஷ் தொடர்பு முகவரி மற்றும் போன் நம்பரை கொடுக்கும்படி கேட்டு வாங்கிச்சென்றார்.

ஆனால் அவரால் சரியான முகவரியை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து அந்த நபர் இது குறித்து ஜிக்னேஷ் சகோதரர் அசோக்கிடம் தெரிவித்தார். அசோக்கும் தனது சகோதரர் குறித்து பிரித்வியிடம் கேட்டார்.

ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே தனது சகோதரரை காணவில்லை என்று கூறி அசோக் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜிக்னேஷை தேடி வந்த நிலையில் ஜிக்னேஷ் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் அவரை அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தியபோது அவரது அவரது காதலன் நிலேஷ் என்பவடன் சேர்ந்து ஜிக்னேஷை கொலை செய்து தொழிற்சாலை ஒன்றின் அடியில் அவரது உடலைப் புதைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அப்பெண் தெரிவித்த இடத்தை தோண்டி ஜிக்னேஷ் உடலை எடுத்து டி.என்.ஏ.பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ''பிரித்விக்கு ஜிக்னேஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நிலேஷுடன் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் அத்தொடர்பை இருவரும் தொடர்ந்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது தொடர்புக்கு தடையாக இருக்கும் ஜிக்னேஷை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக ஜிக்னேஷ் அருந்தும் மதுவில் விஷம் கலந்து கொடுத்தனர். இதில் விக்னேஷ் இறந்தவுடன் அவரது உடலை எடுத்துச்சென்று தொழிற்சாலையில் புதைத்துவிட்டனர். அதன் பிறகு ஜிக்னேஷ் உறவினர்களிடம் அவர் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார் என்று கூறி பிரித்வி நம்பவைத்தார்'' என்றார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரதிபா கூறுகையில்,' 'கொலை செய்யப்பட்ட ஜிக்னேஷ் மனைவியிடம் நடத்திய விசாரணையில், முழு விபரம் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ஜிஐடிசி பகுதியில் உள்ள 12 அடி ஆழ குழியில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்," என்று கூறினார்.

திருச்சி: வண்டல் மண் எடுக்க ரூ.4,000 லஞ்சம் - நீர்வளத்துறை அதிகாரி கைது!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட். இவர், முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிரு... மேலும் பார்க்க

கரூர்: தாய், மகளுக்கு கத்திக் குத்து; பலியான தாய்... சிகிச்சையில் மக்கள்! - என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பாப்பாம்மாள் (வயது: 65). இவர் மகள் மஞ்சுளா (வயது: 42). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொலைசெய்து உடலின் மீது சர்க்கரை தூவியது ஏன்? - சிக்கிய ஜோடியின் 'பகீர்' வாக்குமூலம்!

ஒரு கொலை... அதை மறைக்கத் தமிழ் சினிமா பாணியில் போடப்பட்ட திட்டம்... ஆனால், வெறும் 5 மணி நேரத்தில் அத்தனை ‘ஸ்கெட்சையும்’ காலி செய்து, கொலையாளிகளைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது காவல்... மேலும் பார்க்க

சாமியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோயில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் - வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாகக் கருதப்படும் நாக்பூரில் உள்ள ஷிட்லா தேவி கோயிலில் மர்ம் நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கோயில் பொறுப்பாளர் ... மேலும் பார்க்க

அரக்கோணம்: கார் ஷெட்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள்; சிக்கிய இருவர்; பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கையாகவே மிக உயர்தரமான சந்தன மரங்கள் விளைகின்றன. இங்கிருந்து வெட்டப்படும் சந்தன மரங்களைச் சேகரிக்கவும், பாதுகாப்பாகப் பராமரிக்கவும் அரை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி த.வெ.க நிர்வாகி மீது இளம்பெண் மிரட்டல் புகார் - போலீஸார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த த.வெ.க.வைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் தன்னை... மேலும் பார்க்க