செய்திகள் :

தேனி: கோமா நிலையில் சிறுவன்; `அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சைதான் காரணம்' - உறவினர்கள் போராட்டம்

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார். இவர் கடுமையான சளி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது சிறுவனுக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதாகவும், அதனை அகற்றுவதற்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அங்குச் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அங்கு கோமா நிலையில் உள்ள சிறுவனை, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்து கோமா நிலையில் உள்ள சிறுவனைப் பார்வையிட்டு மருத்துவர்களிடம் உடல்நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

அரசு தலைமை மருத்துவமனை பெரியகுளம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா, ”நிவாஸ் என்ற மாணவனுக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் அவர் கோமா நிலைக்குச் சென்றதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தேனி அரசு மருத்துவமனையில் அச்சிறுவனை சந்தித்தேன். பின்னர் மருத்துவர்கள் விவரங்களை தெரிவித்தனர்.

அதேபோல் சுகாகாரத்த்துறை அமைச்சருக்கு இந்தச் சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தகவல் தெரிந்த நிலையில், அவர் சென்னையில் இருந்து துணை இயக்குநரை அனுப்பி சிறுவனுக்கான சிகிச்சை குறித்து கேட்டுள்ளார். அவர்கள் மாணவன் நிவாஸை ஆய்வு செய்துவிட்டு அவரது சிகிச்சை விவரங்களை எடுத்துக் கொண்டு சென்னை சென்றுள்ளனர்.

கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா

நாளை நானும் சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசவுள்ளேன். மருத்துவர் தவறு செய்திருந்தால் அவருக்கான தண்டனையை தமிழ்நாடு அரசு நிச்சயம் பெற்றுக் கொடுக்கும். மாணவன் 54 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில், முன்னேற்றம் இல்லை. சிறுவன் கடினமான தருணத்தில் உள்ளார். அவரது மருத்துவ அறிக்கை வந்தவுடன், தவறு செய்த மருத்துவருக்கு தவெக அரசு தண்டனை பெற்றுக் கொடுக்கும், அதற்கான நிவாரணத்தையும் உறுதியாகப் பெற்றுக் கொடுப்போம்” எனக் கூறினார்.

வந்தே மாதரம்: `அரசியல் நிர்ணய சபை முடிவுக்கு எதிரானது; இந்து தேசிய முயற்சி!' - எம்.பி ஆ.ராசா கண்டனம்

இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேசியப் பாடலாக வந்தே மாதரத்தை அறிவிப்பதோடு, அதை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை பா.ஜ.க அரசு தாக்கல... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``ராகுல் காந்தியால் இந்த ஒரு வரியை பகிரங்கமாகச் சொல்ல முடியுமா?" - அன்புமணி சவால்!

கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது மேகதாது பகுதியைப் பார்வையிடுவதோ தமிழ்நாட்டுக்குப் பெரும் பாதகமாக அமையும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சென... மேலும் பார்க்க

'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி' - கனிமொழி கண்டனம்

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026'-ஐ கடந்த 24-ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநில... மேலும் பார்க்க

PoK போராட்ட செய்தி: 'நியூயார்க் டைம்ஸ்' இதழின் தலைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்!

PoK-வின் மிர்பூர் பகுதியில் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராகச் சிவில் உரிமைக் குழுக்கள் திரண்டபோது வன்முறை வெடித்தது. அதிகரிக்கும் விலைவாசி உயர்வு, செலவு, நிர்வாக அலட்சியம், அரசியல் பாகுபாடு மற்றும்... மேலும் பார்க்க

குடியாத்தம்: `தவெக எம்எல்ஏ வெக்கமில்லாமல் பல்லிளிக்கிறார்’- வெளிநடப்பு செய்த திமுக நகர்மன்றத் தலைவர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து கவுன்சிலர்களுடன் வெளிநடப்பு செய்தார், தி.மு.க-வைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் சௌந்தரராஜன். அப்போது பேசிய சௌந... மேலும் பார்க்க

தாத்தா தமிழகத்தின் 'ஸ்பீக்கர்', பேத்தி சர்வதேச `பெஸ்ட்' ஸ்பீக்கர்! - கலக்கும் காந்தள்

தி ஹேக், நெதர்லாந்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். 'ரோம் சட்டம்' என்னும் ஒப்பந்தத்தின்படி நிறுவப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்நகரின் முக்கிய‌ அடையாளம். உலக அளவில் இனப்படுகொலை, ஆக்கிரமிப்பு,... மேலும் பார்க்க