செய்திகள் :

கரூர்: `நிதி ஒதுக்கியாச்சு; சாலை எப்போது போடுவீங்க?'- சிதிலமடைந்த சாலைகள்; கேள்வி எழுப்பும் மக்கள்!

post image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அங்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய சாலைகள், தெருக்கள் பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலைகள் பழுதடைந்து உள்ளன. அம்ருத் 2.0 குடிநீர் திட்ட பணிகளுக்காக இந்த தார் சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்ற காரணத்தால், சாலைகளில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டு சாலை சேதமடைந்து நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், தார் சாலையை பராமரித்து புதுசாலை அமைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

damage aana saalai

அதன்படி, தமிழ்நாடு அரசு நகர்ப்புற சாலை கட்டமைப்பு 2025 -26 -ன் திட்டத்தின் கீழ் தார் சாலைகள் பலப்படுத்துதல் பணி செய்வதற்கு ரூபாய் ஒரு கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. 4-வது வார்டு அங்காளம்மன் கோயில் தெரு முதல் மேல அக்ரஹாரம், நடு அக்ரஹாரம், மேலக்கார தெரு, கீழ அக்ரஹாரம் வரை தார் சாலை பலப்படுத்துதல் பணி மற்றும் பிச்சம்பட்டி மயானம் செல்லும் சாலை, கோவக்குளம் 3-வது வீதி ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கு கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் நடந்தது. ஆனால், 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் பணிகள் தொடங்கப்படாத நிலையில் உள்ளது.

இது குறித்து பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்,

"இதனால், அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள், சத்துணவு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் சாப்பிடுபவர்கள், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம், நூலகம், நீதிமன்ற வளாகம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராம வங்கி, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அங்காளம்மன் கோயில், ஸ்ரீ பூமி நீளா வரதராஜ பெருமாள் கோயில், ருக்மணி சத்திய பமா சமேத ராஜகோபால சுவாமி கோயில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், ஆகியவற்றிற்குச் செல்லும் பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் வாசிகள், வாகனங்கள் செல்வதற்கு மட்டுமன்றி, நடந்துகூட செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

damage aana saalai

எனவே, அரசு ஒதுக்கிய நீதியை சரியாகப் பயன்படுத்தி உடனடியாக தார் சாலை பலப்படுத்தும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால், போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம்" என்றனர்.

தாத்தா தமிழகத்தின் 'ஸ்பீக்கர்', பேத்தி சர்வதேச `பெஸ்ட்' ஸ்பீக்கர்! - கலக்கும் காந்தள்

தி ஹேக், நெதர்லாந்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். 'ரோம் சட்டம்' என்னும் ஒப்பந்தத்தின்படி நிறுவப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்நகரின் முக்கிய‌ அடையாளம். உலக அளவில் இனப்படுகொலை, ஆக்கிரமிப்பு,... மேலும் பார்க்க

`கர்நாடக முதல்வரை அழைத்து வந்து டெல்டா வறட்சியை, முதல்வர் விஜய் காட்ட வேண்டும்' - பி.ஆர்.பாண்டியன்

தஞ்சாவூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``காவிரியை நம்பித்தான் நிலத்தடி நீர் உள்ளது. ​சென்னை உட்பட ... மேலும் பார்க்க

`முதல்வர் விஜய் இங்கு வரவிருக்கிறார்; இரு மாநில நலன்களையும் கருத்தில் கொண்டு..!' - டி.கே.சிவக்குமார்

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரம், இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாகியிருக்கிறது. அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கர்நாடகா அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதி... மேலும் பார்க்க

"அப்போ Active-ஆ இருந்திருந்தா இப்போ Inactive Modeக்கு தள்ளியிருக்க மாட்டாங்க"- திமுகவைச் சாடும் தவெக

மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பான விவகாரம் இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாக உருவாகிவருகிறது. அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கர்நாடாக அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற மத்திய அமைச்சரின் பதி... மேலும் பார்க்க

"யார் குரலையும் கேட்காமல் indifferent, inactive ஆக இந்த அரசு இருப்பது நல்லதல்ல" - ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்... மேலும் பார்க்க

``வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டெல்லாம் குடியுரிமைக்கான சான்று அல்ல"- கல்கத்தா உயர் நீதிமன்றம்

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகள் ஆகியவை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் அல்ல என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் தீ... மேலும் பார்க்க