செய்திகள் :

`முதல்வர் விஜய் இங்கு வரவிருக்கிறார்; இரு மாநில நலன்களையும் கருத்தில் கொண்டு..!' - டி.கே.சிவக்குமார்

post image

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரம், இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாகியிருக்கிறது. அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கர்நாடகா அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதிலும், விவசாயிகளின் கோரிக்கையும் இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கிறது.

இதற்கிடையில், காவிரி நீர் வரத்தின்றி டெல்டா விவசாயிகள் கடும் சோகத்தில் இருக்கின்றனர். அதே நேரம், தற்போது இருக்கும் தவெக அரசு சரியாகச் செயல்படாததே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், முதல்வர் கர்நாடகா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், விவசாயச் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டுடனான காவிரி நதிநீர் பகிர்வு குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகள் காரணமாக அனைவரும் மிகவும் மும்முரமாக இருந்ததால், இன்று மாலை 5 மணிக்கு நாங்கள் கூடிப் பேசவுள்ளோம். நாங்கள் ஏற்கெனவே அனைத்தையும் விவாதித்து இறுதி செய்துவிட்டோம். இனி நடைமுறை சார்ந்த சில விஷயங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அவற்றையும் நாங்கள் விவாதிப்போம். காவிரி விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் நான் அழைப்பு விடுத்துள்ளேன். தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் வரவிருக்கிறார். காவிரி நீர் விவகாரம் குறித்து விவாதித்து, இரு மாநிலங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஒரு தீர்வை எட்ட நாங்கள் விரும்புகிறோம். அவரது கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டதுடன், நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளேன்" என்றார்.

இந்த நிலையில், காவிரியில் 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தாத்தா தமிழகத்தின் 'ஸ்பீக்கர்', பேத்தி சர்வதேச `பெஸ்ட்' ஸ்பீக்கர்! - கலக்கும் காந்தள்

தி ஹேக், நெதர்லாந்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். 'ரோம் சட்டம்' என்னும் ஒப்பந்தத்தின்படி நிறுவப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்நகரின் முக்கிய‌ அடையாளம். உலக அளவில் இனப்படுகொலை, ஆக்கிரமிப்பு,... மேலும் பார்க்க

`கர்நாடக முதல்வரை அழைத்து வந்து டெல்டா வறட்சியை, முதல்வர் விஜய் காட்ட வேண்டும்' - பி.ஆர்.பாண்டியன்

தஞ்சாவூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``காவிரியை நம்பித்தான் நிலத்தடி நீர் உள்ளது. ​சென்னை உட்பட ... மேலும் பார்க்க

கரூர்: `நிதி ஒதுக்கியாச்சு; சாலை எப்போது போடுவீங்க?'- சிதிலமடைந்த சாலைகள்; கேள்வி எழுப்பும் மக்கள்!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அங்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய சாலைகள், தெருக்கள் பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களி... மேலும் பார்க்க

"அப்போ Active-ஆ இருந்திருந்தா இப்போ Inactive Modeக்கு தள்ளியிருக்க மாட்டாங்க"- திமுகவைச் சாடும் தவெக

மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பான விவகாரம் இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாக உருவாகிவருகிறது. அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கர்நாடாக அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற மத்திய அமைச்சரின் பதி... மேலும் பார்க்க

"யார் குரலையும் கேட்காமல் indifferent, inactive ஆக இந்த அரசு இருப்பது நல்லதல்ல" - ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்... மேலும் பார்க்க

``வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டெல்லாம் குடியுரிமைக்கான சான்று அல்ல"- கல்கத்தா உயர் நீதிமன்றம்

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகள் ஆகியவை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் அல்ல என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் தீ... மேலும் பார்க்க