செய்திகள் :

`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?' - கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது என்ன?

post image

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட கோழி வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில், `கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே, அவற்றுக்கு தீவனம் வழங்குவதை பண்ணையாளர்கள் மற்றும் வணிகர்கள் கைவிட வேண்டும். விற்பனைக்கு மிக அருகில் இருக்கும் நேரத்தில் கோழிகளுக்குத் தீவனம் வழங்குவதால், அவற்றின் உடல் எடை செயற்கையாக அதிகமாகக் காட்டப்படுகிறது.

இறைச்சி

இறுதி நேரத்தில் தீவனம் வழங்குவது வெறும் எடை ஏமாற்றுதல் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதை ஒரு கட்டாய வழிகாட்டு நெறிமுறையாக அரசு அறிவிக்க வேண்டும்' என்றும், இதனைச் சட்டமாக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரித்தது. அதைத் தொடர்ந்து, கறிக்கோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றாததைக் கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 31ம் தேதி முதல் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இந்த நிலையில், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு மற்றும் வணிகர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் நாளை சிக்கன் விற்பனை நடைபெறும் எனவும் தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

மகாராஷ்டிரா: பள்ளி அருகில் வடாபாவ், சமோசா விற்க தடை; பிறந்தநாளில் சாக்லேட் வழங்கவும் கட்டுப்பாடு

மகாராஷ்டிராவில் புதிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் உணவகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில்... மேலும் பார்க்க

தமிழக அரசின் உத்தரவை மீறி கர்நாடகாவுக்கு கனிமங்கள் கடத்தல்; வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது கேரளா, கர்நாடக அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமம் கடத்திய வாகனங்கள் பறிமுதல... மேலும் பார்க்க

'ரயில் நிலையத்திற்குச் சென்று தட்கல் டிக்கெட் எடுப்பவரா நீங்க?' - இனி ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் நடைமுறை

வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்குப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. என்ன நடைமுறை? இனி பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நே... மேலும் பார்க்க

`முதல்வர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை; அதே சீமான் பற்றி பேசினால் இல்லையா?' - நீதிமன்றம் கேள்வி

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில், `நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் மு.... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி ரத்து! - நீதிமன்றம் கூறியதென்ன?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிஉயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர... மேலும் பார்க்க

தருமபுரி: கொரில்லா வேடமிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு; போலீஸாரின் நூதனப் பிரசாரம் | Photo Album

தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழ... மேலும் பார்க்க