மன்னார்குடி: டி.ஆர்.பாலு மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; செந்தில் பாலாஜ...
'ரயில் நிலையத்திற்குச் சென்று தட்கல் டிக்கெட் எடுப்பவரா நீங்க?' - இனி ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் நடைமுறை
வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்குப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
என்ன நடைமுறை?
இனி பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நேரத்திற்குக் காத்திருக்க தேவையில்லை. வருகிற 1-ம் தேதி முதல், டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதன் படி, ஏ.சி தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கன் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை வழங்கப்படும். ஏ.சி அல்லாத தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கன் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை வழங்கப்படும்.

இந்த நேரத்தில் வந்த தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த டோக்கனைப் பெற்றவர்கள் தட்கல் டிக்கெட் புக்கிங் நேரத்தில் வரிசையில் நிற்காமல் நேரடியாக டிக்கெட் புக்கிங்கிற்கு வரலாம்.
10, 15 டோக்கன்கள்
ஆரம்பத்தில், ஒவ்வொரு முன்பதிவு மையத்திலும் ஏ.சி தட்கலுக்கு 10 டோக்கன்களும், ஏ.சி அல்லாத தட்கலுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளது.
இதன் பின், பயணிகளின் தேவை மற்றும் ரயில் நிலையத்தின் உள்ளூர் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும்.
டோக்கன் பெற்றவர்களுக்கு தட்கல் டிக்கெட் புக் செய்த பிறகும் டிக்கெட்டுகள் இருந்தால், வரிசையில் முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் புக் செய்யப்படும்.
A மற்றும் B வகைகள்
இந்த டோக்கன் அடிப்படையிலான தட்கல் டிக்கெட் புக்கிங்கிலேயே இரண்டு வகைகள் உண்டு - A மற்றும் B.

A வகை குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் தங்களது புகைப்பட அடையாள அட்டையும், குடும்ப உறுப்பினரின் அடையாள அட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.
B வகையில் தனிநபர்கள், குடும்பம் அல்லாத குழுக்கள், பொதுப் பணிகள் ஆகியவற்றுக்கு டோக்கன் வழங்கப்படும்.
டோக்கன் பெற்ற பிறகு இந்த வகைகளை மாற்ற முடியாது.
ஆன்லைன் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் எந்தவித மாற்றமும் இல்லை.

















