செய்திகள் :

"30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி; நாங்க நிலம் தரணுமா?" - சின்ன மண்டலவாடி மக்கள் அதிருப்தி

post image

குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டிய அங்கன்வாடி மையமே கடந்த 30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டு வரும் அவலநிலை.

திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சியின் சின்ன மண்டலவாடி கிராமத்தில் போதிய வசதிகள் இல்லாத வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் உணவுப் பொருட்கள், உணவுகளைச் சமைப்பது, விளையாட்டுப் பொருட்கள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர் என அனைத்திற்கும் வெறும் 10க்கு 10 அறை மட்டுமே உள்ளது.

இதனால் குழந்தைகள் சுதந்திரமாக அமர்ந்து கல்வி கற்க கூட வசதி இல்லை, மேலும் கழிவறை வசதி, சமையலறை வசதி என அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்து பெற்றோர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப அச்சம் கொள்கின்றனர்.

அங்கன்வாடி
அங்கன்வாடி

இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனுக்கள் அளித்தும், நிரந்தர அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, "கிராம மக்கள் மூன்று சென்ட் நிலத்தைத் தானமாக வழங்கினால், புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டலாம்'' என்று அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பதில் கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "எங்களின் குறைகளை அரசிடம் எடுத்துச் சொல்வதுதான் எங்கள் பணி. அதற்கு நிரந்தரத் தீர்வு காண்பது அரசின் பொறுப்பு. அங்கன்வாடி கட்டிடம் கட்ட அரசு எங்களிடமே நிலம் கேட்பது எந்த வகையில் நியாயம்? குழந்தைகளுக்கான அடிப்படை வசதியை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை அல்லவா?" என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், "30 ஆண்டுகளாக ஒரு நிரந்தர அங்கன்வாடி கட்டிடம் கூட அமைக்க முடியாத நிலை வேதனை அளிக்கிறது.

அங்கன்வாடி
அங்கன்வாடி

இனியும் நிலம் தொடர்பான காரணங்களைக் கூறி திட்டத்தைத் தாமதப்படுத்தாமல், அரசு தானாகவே உரிய இடத்தைத் தேர்வு செய்து, அனைத்து அடிப்படை வசதிகளுடனும் புதிய அங்கன்வாடி மையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.

குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரம்பக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள் எந்தத் தடையும் இன்றி கிடைக்க வேண்டுமெனில், சின்ன மண்டலவாடி அங்கன்வாடி பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

'திமுக திட்டத்துல நீங்க ஏன் ஸ்டிக்கர் ஒட்டுறீங்க!' - முதல்வருக்கு எதிராக கொந்தளித்த திமுக கவுன்சிலர்

ஜூலை மாதத்துக்கான சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.வே.ர... மேலும் பார்க்க

'151 உயர்சிறப்பு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை இழந்தது ஏன்?'- TVK அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. இடங்களை வீணடிக்காமல் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (All Ind... மேலும் பார்க்க

AI தொழில்நுட்பத்துடன் சாலைத் திட்டங்கள் - நிலம் கையகப்படுத்த புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கும் CUMTA

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Web GIS தொழில்நுட்பங்களை ஒரு... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல் - மதுபான ஆலைகளிடம் Party fund? - DVAC வழக்கின் பின்னணி?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும்... மேலும் பார்க்க

'அரசுப் பேருந்துகளில் Earphone இல்லாமல் பாட்டு கேட்கக்கூடாது' - போக்குவரத்துத்துறையின் உத்தரவு என்ன?

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிகள் சுமுகமாகப் பயணிக்க சில நெறிமுறைகளைக் கூறி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அனைத்து மண்டல அரசுப் போக்குவரத்துக்... மேலும் பார்க்க

''அதிகாலை 5 மணி வேணாம்!" தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் நேர மாற்றம் கோரிக்கை!

தாம்பரம் - தென்காசி ரயில் வழித்தடத்தில் இரு வழி மார்க்கமாக சிறப்பு ரயில்கள் வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையில் 6 நாட்கள் இயக்கவிருப்பதாக தென்னக ரயில்வே துறையிலிருந்து அறிவிப்பு சி... மேலும் பார்க்க