செய்திகள் :

'திமுக திட்டத்துல நீங்க ஏன் ஸ்டிக்கர் ஒட்டுறீங்க!' - முதல்வருக்கு எதிராக கொந்தளித்த திமுக கவுன்சிலர்

post image

ஜூலை மாதத்துக்கான சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.

வே.ராஜன்
வே.ராஜன்

வே.ராஜன் பேசுகையில், ``முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை காமராஜர் காலை உணவுத் திட்டமென பெயர் மாற்றியிருக்கிறார்கள். முடிந்தால் மாலை சிற்றுண்டி திட்டமென ஒன்றை கொண்டு வந்து அதற்கு பெயர் வைத்துக் கொள்ளுங்கள். இருக்கிற பெயரை ஏன் மாற்றுகிறீர்கள். எங்களின் தலைவர் ஸ்டாலின் அவர் பெயரை எந்தத் திட்டத்துக்கும் வைத்தாரா? நான் முதல்வன் திட்டத்தில் அவர் பெயர் இருக்கிறதா? மகளிர் விடியல் பயணத்தில் அவர் பெயர் இருக்கிறதா?

பிறகு ஏன் எல்லா திட்டங்களின் பெயரையும் மாற்றுகிறீர்கள்? இப்படி எல்லாவற்றையும் மாற்றுகிறீர்களே...வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல்வராக நீங்கள் தேசியக்கொடியை ஏற்றுவீர்கள். முதல்வருக்கு தேசியக்கொடி ஏற்றும் உரிமையை வாங்கி கொடுத்ததே கலைஞர்தான். முடிந்தால் அதை வேண்டாமென்று சொல்லுங்கள் பார்ப்போம்' என்றார்.

மாமன்ற கூட்டம்
மாமன்ற கூட்டம்

இதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, 'கடந்த திமுக அரசு ஆட்சியமைந்த உடன் அம்மா உணவகங்களின் மீது யாரும் கை வைக்கக்கூடாது, அவை அந்தப் பெயரிலேயே அப்படியே தொடருமென எங்களின் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இந்த அரசு அவர்கள் கொண்டு வராத அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத திட்டங்களில் கூட ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. நிதி நெருக்கடி நிலவி வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் முதல்வரின் விளம்பரங்களை பேனர்களாக அடித்து வைத்திருக்கின்றனர். திமுக எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்களின் தொகுதி நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் கூட முதல்வரின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் என்ன நியாயம்?' என்றார்.

மன்னார்குடி: டி.ஆர்.பாலு மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவா?

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 இடங்களில் இன்று ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக தி... மேலும் பார்க்க

அமெரிக்க தளத்தில் ஈரான் தாக்குதல், ட்ரம்ப்-நெதன்யாகு, ஜெலன்ஸ்கி மீட், ஈராக் தாக்குதல் ஏன்?|#AllInOne

ஈரான் போர், அதிபர்கள் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய உலக செய்திகளை இங்கே சின்னச் சின்ன செய்திகளாக காணலாம். ஈரான் தாக்குதல்: ஜூலை 24-ம் தேதிக்கு முன்பு, தொடர்ச்சியாக 13 நாள்கள், அமெரிக்கா, ஈரான் இடையே மோதல... மேலும் பார்க்க

பொறுப்பும் கொடுக்கவில்லை… மரியாதையும் அளிக்கவில்லை! - தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் புலம்பல்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் இணை... மேலும் பார்க்க

'151 உயர்சிறப்பு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை இழந்தது ஏன்?'- TVK அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. இடங்களை வீணடிக்காமல் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (All Ind... மேலும் பார்க்க

AI தொழில்நுட்பத்துடன் சாலைத் திட்டங்கள் - நிலம் கையகப்படுத்த புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கும் CUMTA

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Web GIS தொழில்நுட்பங்களை ஒரு... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல் - மதுபான ஆலைகளிடம் Party fund? - DVAC வழக்கின் பின்னணி?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும்... மேலும் பார்க்க