செய்திகள் :

சென்னையில் முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகம் - Chubb, Nordex, MotiveLink உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு

post image

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் ₹425 கோடி முதலீடும், 2,920 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலகளாவிய காப்பீட்டு நிறுவனமான Chubb, சென்னையில் தனது முதல் Global Capability Centre (GCC)-ஐ அமைக்கிறது. இதன் மூலம் 220 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல், ஜெர்மனியைச் சேர்ந்த காற்றாலை தொழில்நுட்ப நிறுவனமான Nordex, சென்னையில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தை தொடங்குகிறது. இந்த மையத்தின் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்றான University of Western Australia (UWA), இந்தியாவில் தனது முதல் வளாகத்தை சென்னை வேளச்சேரியில் அமைக்க உள்ளது. ₹125 கோடி முதலீட்டில், சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும்.

1911-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட UWA, QS World University Rankings 2026 பட்டியலில் 77-வது இடத்தை பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டில் அமையும் முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தென் கொரியாவின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான MotiveLink, காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ₹300 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீடு, தொழில்துறை அமைச்சர் ஜூன் 2026-இல் மேற்கொண்ட தென் கொரியா பயணத்தின் தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகள் மூலம் சென்னை, உலகளாவிய திறன் மையங்கள் (GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக மேலும் வலுப்பெறும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை விரைவாக செயல்படுத்தவும், தமிழ்நாட்டில் அவற்றின் திட்டங்கள் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மாநில அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

`முதல்வர் எங்களை கடிந்துகொண்டாலும் தவறில்லை.. அமைச்சர்களுக்கு அவர்தானே லீடர்!' - அமைச்சர் வன்னிஅரசு

நெல்லையில் ஆணவப் படுகொலைக்குப் பலியான கவினின் முதல் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, 'ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்படும்' என உறுதிபட கூறியிருக்கிறார... மேலும் பார்க்க

பரமத்திவேலுார் அரசு மருத்துவமனை: ரூ. 6 கோடி மதிப்புள்ள கட்டடம் எப்போது திறக்கப்படும்?- மக்கள் கேள்வி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாலப்பட்டி, நன்செய் இடையார், பரமத்திவேலுார், பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்! - DVAC-ன் குற்றச்சாட்டு என்ன?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நேற்று (ஜூலை 29) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ராகுல் vs அமித் ஷா: 'மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷாதான் காரணமா?' - நாடாளுமன்றத்தில் காரசாரம்

நேற்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி vs மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக் காரசார விவாதம் சென்றது. ராகுல் காந்தி vs அமித் ஷா வினாத்தாள் கசிவு சம்பந்தமாக டெல... மேலும் பார்க்க

"சீக்கிரத்தில் அண்ணன் ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார்" - என்ன சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்?

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருகாட்டூர் பகுதியில் சமுதாய நலக் கூடம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் தி.மு.க அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான அனிதா ரா... மேலும் பார்க்க

கைதாகிறாரா செந்தில் பாலாஜி? - டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் த... மேலும் பார்க்க