செய்திகள் :

Ramayana: "முழுமையான நேர்மையோடு அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது" - ராமாயணா இயக்குநர்

post image

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்திருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ரிலீஸாக வருகிறது.

திட்டமிடல்களுடன் உலகமெங்கும் இப்படத்தை ரிலீஸ் செய்திடவும் படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.

Ramayana Movie
Ramayana Movie

இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் குறித்தும், இந்தத் திரைப்படம் உருவான விதம் குறித்தும், இப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்திருக்கிறார்.

அவர், "ராமாயணம் என்பது மிகவும் மகத்தான ஒன்று. அது பிரமாண்டத்தால் மட்டுமல்ல, 'ராமாயணம்' காலத்தைக் கடந்தும் உயரிய மதிப்புகளைச் சொல்கிறது. ஒரு திரைப்படப் படைப்பாளியாக, இதை உலகளாவிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு எப்போதும் தோன்றியதில்லை.

ஏனெனில் அது ஏற்கெனவே உலகளாவிய ஒன்றுதான். முழுமையான நேர்மையோடும், உண்மைத்தன்மையோடும், பேரன்பு மற்றும் மரியாதையோடும் அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது.

எழுத்து, நடிகர்களின் பங்களிப்பு, கலை, இயக்கம், இசை, கிராபிக்ஸ் என இந்த மகத்தான பாரம்பர்யத்தை அதற்குரிய கண்ணியத்தோடும் மரியாதையோடும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக இருந்தது.

Nitesh Tiwari
Nitesh Tiwari

இந்தத் தொலைநோக்குப் பார்வையைத் திரையில் நிஜமாக்க, உலகின் மிகச்சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதையாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறோம்.

இது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் ராமாயணத்தின் பிரமாண்டத்தை மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதை நிலைத்திருக்கச் செய்த அதன் உணர்ச்சிகளையும், மனிதநேயத்தையும், காலத்தால் அழியாத ஆன்மாவையும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

"நான் அசிங்கமான பெண் என்று கூறி பிரிந்து சென்றார்" - கணவரின் நினைவுகளைப் பகிர்ந்த நடிகை அபராமேத்தா

பாலிவுட் நடிகையும், டிவி நடிகையுமான அபரா மேத்தா பாலிவுட் நடிகர் தர்சன் ஜரிவாலா என்பவரை 1982ம் ஆண்டு திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் கட... மேலும் பார்க்க

"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" - சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பிரத்ய... மேலும் பார்க்க

நீட் போராட்டம்: "இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது; புறக்கணிக்கவும் கூடாது" - கரீனா கபூர்

டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கரீனா கபூரும் தனது ஆதரவைத் தெரிவித... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "மாணவர்களின் தைரியமான, துணிச்சலான செயல் இது"- சல்மான் கான் ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர்... மேலும் பார்க்க

`1000 ஊசிகள் போட்டுக்கொண்டேன்..!' - செயற்கை முறையில் குழந்தை பெற்ற வேதனையைப் பகிர்ந்த பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட போரா... மேலும் பார்க்க

டெல்லி மாணாவர்கள் போராட்டம்: "இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாங்சுக் போராடுகிறார்" - பிரீத்தி ஜிந்தா

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க