செய்திகள் :

"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" - சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை

post image

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.

Sai Pallavi - Ramayana
Sai Pallavi - Ramayana

அங்கு படக்குழுவினர் கலந்துகொண்டு படம் தொடர்பாகப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில் சாய் பல்லவி சீதையாக நடிப்பது பற்றிப் புகழ்பெற்ற ராமாயணம் (இந்தியில் வெளிவந்த தொடர் இது) தொலைக்காட்சி தொடரில் சீதையாக நடித்திருந்த தீபிகா சிக்லியா பேசியிருக்கிறார்.

அவர், "நான் சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் அற்புதமான கலைஞர். ஆனால், சீதையாக அவர் திரையில் எப்படித் தெரிவார் என்று எனக்கு இப்போது தெரியாது.

திரையில் பார்த்த பிறகுதான் அதை முடிவு செய்ய முடியும். ராமாயணத்தில் சீதையின் தோற்றம் பற்றிய தெளிவான வர்ணனைகள் உள்ளன.

பாதாம் போன்ற கண்கள், குறிப்பிட்ட உயரம், கூந்தல் மற்றும் மேனி நிறம் என அதில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய ராமாயண சீரியலின் இயக்குநர் ராமநந்த் சாகர் அந்த அம்சங்களைத்தான் தேடினார்.

deepika chikhalia
deepika chikhalia

அதை என்னிடம் கண்டறிந்து நடிக்க வைத்தார். அதுமட்டுமல்லாமல், ராமாயணத்தில் சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

கொரோனா லாக்டவுன் காலத்தில் எங்களது பழைய ராமாயணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு, இன்றைய புதிய தலைமுறையினரின் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், அந்தப் பிம்பத்தை மக்கள் மனதிலிருந்து எளிதில் அழித்துவிட முடியாது," எனக் கூறியுள்ளார்.

நீட் போராட்டம்: "இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது; புறக்கணிக்கவும் கூடாது" - கரீனா கபூர்

டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கரீனா கபூரும் தனது ஆதரவைத் தெரிவித... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "மாணவர்களின் தைரியமான, துணிச்சலான செயல் இது"- சல்மான் கான் ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர்... மேலும் பார்க்க

`1000 ஊசிகள் போட்டுக்கொண்டேன்..!' - செயற்கை முறையில் குழந்தை பெற்ற வேதனையைப் பகிர்ந்த பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட போரா... மேலும் பார்க்க

டெல்லி மாணாவர்கள் போராட்டம்: "இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாங்சுக் போராடுகிறார்" - பிரீத்தி ஜிந்தா

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர் போராட்டம்: "தடியடி தேவையில்லை; அரவணைக்கும் கைகள்தாம் தேவை" - நடிகர் சோனு சூட்

நீட் தேர்வு முறைகேடு, கல்வியில் சீர்திருத்தம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உட்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போ... மேலும் பார்க்க

வயதான தோற்றத்தில், சோர்வாக சல்மான் கான்: `அவருக்கு என்ன ஆச்சு?' - இணையத்தில் ரசிகர்கள் வேதனை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சல்மான் கான் மும்பையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார். குடிசை புனரமைப்ப... மேலும் பார்க்க