செய்திகள் :

Rashmika Mandanna: "அவர்கள் திட்டதோடு இருந்தது எனக்கு பயத்தைத் தந்தது!' - ராஷ்மிகா மந்தனா

post image

ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். முக்கியமாக, பாலிவுட்டிலும் முக்கிய நாயகியாக உருவெடுத்திருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

பாலிவுட்டில் இத்தகைய வெற்றி கிடைத்ததற்காக காரணம் பற்றி சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கிறார் ராஷ்மிகா.

அவர் பேசுகையில், "தென்னிந்திய சினிமாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பாலிவுட் திரையுலகிற்குச் சென்றபோது, வழக்கமான எந்தவொரு அமைப்பிற்குள்ளும் சிக்காமல் இயங்கிய தருணமே என்னைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பானது.

அப்போது மற்றவர்கள் ஒரு தெளிவான திட்டத்துடன் இருப்பது போல் தோன்றியதால் எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், என் உள்ளுணர்வை நம்பிப் பயணித்தேன்.

ராஷ்மிகா மந்தனா

இப்போது திரும்பிப் பார்க்கும்போது, மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் விஷயங்களே நமக்கு மிகப்பெரிய பலமாக மாறுகின்றன என்பதை உணர்கிறேன்.

மேலும், ஃபேஷனைப் பொறுத்தவரை எனக்குக் கம்போர்ட்தான் முதன்மையானது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக வாழாமல், தனக்கே உரித்தான பாணியில் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதே உண்மையான அழகு," என்று தெரிவித்துள்ளார்.

"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; என் பிள்ளைகள் 'இவர்களைப்' போல வளர வேண்டும்" - ஜோதிகா பதிவு

வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர‌ பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.இந்தக் கருத்தை முன்வைத்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக... மேலும் பார்க்க

Vimal: ''அதை பற்றி எனக்கு தெரியாதுங்க!'' - செக் மோசடி வழக்கு பற்றிய கேள்விக்கு விமலின் பதில்

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 'மன்னர் வகையறா' திரைப்படத்தைத் தயாரிக்கப் ஃபைனான்சியர் கோபியிடம் விமல் கடன் வாங்கி... மேலும் பார்க்க

Jana Nayagan: `இன்னும் சினிமா பண்ணலையாங்கிற கேள்வி அவ்ளோ வலி தரும்; இப்ப.!' - நடிகர் அருண்

`ஜனநாயகனைக் கொண்டாடி வருகிறார்கள்' தமிழக முதல்வர் விஜய்யின் ரசிகர்கள். சில அமைச்சர்கள் 'இனி திரையில் அவரைப் பார்க்க முடியாதே' எனக் கண் கலங்கி அழுத வீடியோக்கள், விமர்சனங்களையும் ட்ரோல்களையும் ஒருசேர சந... மேலும் பார்க்க

Jana Nayagan: "என் காட்சிகள் நீக்கப்பட்டது வேதனையா இருக்கு; அதிர்ஷ்டமில்லாதவளாக..." - நடிகை ஆனந்தி

நடிகை ஆனந்தி கண்கலங்கியவாறு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ரத்னகுமாரின் '29', சூர்யாவின் 'கருப்பு', விஜய்யின் 'ஜனநாயகன்' என அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்களில், அவ... மேலும் பார்க்க

விருமாண்டி : கலைத் திருவிழா! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 09

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!சினி'ஸ்கோப் 09விருமாண்டிமுதல் காட்சி. ஒரு சிறைக்கைதி பேசுகிறார்.”பெயர் மாறப்பன்... மேலும் பார்க்க

'பட்டாசு வெடித்த ரசிகர்கள்; கண்ணீர் விட்டு அழுத தவெக மாவட்டச் செயலாளர்'- கரூர் ஜன நாயகன் காட்சிகள்

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது. கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நான்கு முக்கிய திரையரங்குகளில் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகியுள்ளது. முதல் காட்சியைப் பார்க்... மேலும் பார்க்க