செய்திகள் :

விழுப்புரம்: சுட்டிக்காட்டிய விகடன்… சுத்தம் செய்யப்பட்ட திண்டிவனம் மேம்பாலம்! - ஆட்சியர் ஆக்‌ஷன்

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம் அது. பிரதான சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் நடந்துதான் அந்த மேம்பாலத்தை அடைய வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் அந்தப் பாதையைத்தான் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்தப் பாதை தற்போது குப்பைக் கிடங்காக மாறி, சுகாதாரமற்றுக்கிடக்கிறது.

திண்டிவனம் மேம்பாலம்

அதனால் அப்பகுதி முழுவதும் வீசும் கடுமையான துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். மேம்பாலத்தின் கீழ் பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளும் தினந்தோறும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பொதுமக்கள் அங்கு பழங்கள் மற்றும் பூக்களை வாங்கி செல்கின்றனர். ஆனால், கடைகளின் அருகிலேயே குப்பைகள் தேங்கி கிடப்பதால் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்தும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் கொசு, ஈ போன்ற பூச்சிகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் கழிவுகளுடன் மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் மேலும் அதிகரிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் இருப்பதாக அப்பகுதி மக்கள் விகடனிடம் கூறினார்கள்.

திண்டிவனம் மேம்பாலம்

அதையடுத்து அந்தப் பிரச்னை குறித்து கடந்த ஜூலை 16 அன்று விகடன் இணையப்பக்கத்தில் `குப்பைக் கிடங்கான திண்டிவனம் மேம்பாலம்.. கண்டுகொள்ளாத நகரட்சி; தீர்வு?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அத்துடன் அந்தப் பிரச்னையை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். அப்போது, `அதிகாரிகளிடம் உடனடியாகப் பேசி அதை சரி செய்கிறேன்’ என்று நம்மிடம் உறுதியளித்தார் ஆட்சியர். அதன்படி அந்த இடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

"இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி.!" - அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ்

2024-ம்‌ ஆண்டு டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் தொடங்கியது ராமதாஸ், அன்புமணி மோதல்.பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன். அக்கா மகனுக்கு கட்சியில் உடனடியாக ப... மேலும் பார்க்க

"எனக்கு டைபாய்டு காய்ச்சல்; தர்மேந்திர பிரதான் ராஜினாமா நிச்சயம் நடக்கும்" - அபிஜித் தீப்கே

டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி.காக்ரோச் ஜனதா கட்சியின்‌ நிறுவனர் அபிஜித் தீப்கே கடந்... மேலும் பார்க்க

`மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்' - பாஜக ஆளும் அஸ்ஸாம் மாணவர் போராட்டத்தில் அமைச்சரின் மகள்

டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய அரசு இன்று அவர்களுடன் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ப... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரவ்னீத் சிங் பிட்டு! - அமைச்சரவை விரைவில் மாற்றம்?

ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 21-ம் த... மேலும் பார்க்க

1997 வினாத்தாள் கசிவு: `அன்று போராளி, இன்று.?' - தர்மேந்திர பிரதான் கடந்து வந்த பாதை!

நீட் வினாத்தாள் கசிவு, அரசு தேர்வுகளில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய கல்வித்துறை மீது கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தி... மேலும் பார்க்க