செய்திகள் :

Vimal: ''அதை பற்றி எனக்கு தெரியாதுங்க!'' - செக் மோசடி வழக்கு பற்றிய கேள்விக்கு விமலின் பதில்

post image

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

'மன்னர் வகையறா' திரைப்படத்தைத் தயாரிக்கப் ஃபைனான்சியர் கோபியிடம் விமல் கடன் வாங்கியிருந்தார். அந்தத் தொகைக்காக விமல் வழங்கிய செக் வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், கோபி செக் மோசடி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மன்னர் வகையறா
மன்னர் வகையறா

அந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. விமல் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை கமலா திரையரங்கிற்கு 'ஜனநாயகன்' திரைப்படம் பார்க்க வந்த நடிகர் விமல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், "இன்னைக்கு 'ஜனநாயகன்' திரைப்படத்தை எல்லாரும் வந்து பார்த்தோம். ரசிகர்களோட பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. முன்னாடியே ரிலீஸ் ஆகியிருந்தாக்கூடத் தளபதி படமா இருக்கும். இப்பவும் தளபதி படம்தான்.

இப்ப நம்ம தமிழ்நாட்டோட சி.எம். படத்தைப் பார்த்த ஒரு சந்தோஷம். ரசிகர்கள் எல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தாங்க. என்னையும் ரசிகர்கள் எல்லாம் விடல.

டான்ஸ் ஆடியே ஆகணும்னு பாட்டை ஒன்ஸ் மோர் கேட்டு, ரெண்டு வாட்டியும் அந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரொம்ப ஜாலியா இருந்தது. ரசிகர்களும் அதுமாதிரி நிறைய செண்டிமெண்ட் சீன்களும் ரொம்ப நல்லா இருந்தது. இந்தப் படத்துல பார்த்தது அப்படியே நிஜமாயிடுச்சு!" என்றார்.

விமல்
விமல்

தொடர்ந்து அவரிடம் செக் மோசடி வழக்கு தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர், "அதைப் பத்தி எனக்குத் தெரியாதுங்க. ரைட், நன்றி வணக்கம். என்னையெல்லாம் தளபதி மாதிரி அழ வைக்கவே முடியாது!" என்று ஜாலியாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார்.

Jana Nayagan: `இன்னும் சினிமா பண்ணலையாங்கிற கேள்வி அவ்ளோ வலி தரும்; இப்ப.!' - நடிகர் அருண்

`ஜனநாயகனைக் கொண்டாடி வருகிறார்கள்' தமிழக முதல்வர் விஜய்யின் ரசிகர்கள். சில அமைச்சர்கள் 'இனி திரையில் அவரைப் பார்க்க முடியாதே' எனக் கண் கலங்கி அழுத வீடியோக்கள், விமர்சனங்களையும் ட்ரோல்களையும் ஒருசேர சந... மேலும் பார்க்க

Jana Nayagan: "என் காட்சிகள் நீக்கப்பட்டது வேதனையா இருக்கு; அதிர்ஷ்டமில்லாதவளாக..." - நடிகை ஆனந்தி

நடிகை ஆனந்தி கண்கலங்கியவாறு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ரத்னகுமாரின் '29', சூர்யாவின் 'கருப்பு', விஜய்யின் 'ஜனநாயகன்' என அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்களில், அவ... மேலும் பார்க்க

விருமாண்டி : கலைத் திருவிழா! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 09

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!சினி'ஸ்கோப் 09விருமாண்டிமுதல் காட்சி. ஒரு சிறைக்கைதி பேசுகிறார்.”பெயர் மாறப்பன்... மேலும் பார்க்க

'பட்டாசு வெடித்த ரசிகர்கள்; கண்ணீர் விட்டு அழுத தவெக மாவட்டச் செயலாளர்'- கரூர் ஜன நாயகன் காட்சிகள்

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது. கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நான்கு முக்கிய திரையரங்குகளில் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகியுள்ளது. முதல் காட்சியைப் பார்க்... மேலும் பார்க்க

Jana Nayagan: 'கற்பூர ஆரத்தி; பால் அபிஷேகம்; ஆட்டம் பாட்டம்' - நெல்லை ரசிகர்கள் உற்சாகம்! |Photos

நெல்லை:கற்பூர ஆரத்தி!பால் அபிஷேகம்! ஆட்டம்! பாட்டம் கொண்டாட்டம்! ஜனநாயகன் ரிலீஸ் ரசிகர்கள் உற்சாகம்!Jana Nayagan Review: மதவெறுப்பிற்கு எதிராகக் களமிறங்கும் நாயகன்; அதற்குள் இத்தனை 'கட்சிப் பிரசாரமா'? மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் `ஜனநாயகன்' ரிலீஸ்: ஈரோடு அண்ணா சினிமாஸ் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் க... மேலும் பார்க்க