செய்திகள் :

மாணவர்கள் போராட்டம்: ``இளைஞர்களை நேரடியாக அவமதிக்கும் செயல்" - பாஜக அரசுக்கு CJP கடும் கண்டனம்!

post image

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, ``நீட் குளறுபடிகள் குறித்து விவாதிக்கப்படும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார். ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை தீவிரமாகிவருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு உயர் கல்வித்துறைச் செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது.

நரேஷ் பால் கங்வார்
நரேஷ் பால் கங்வார்

மத்திய விலங்கு பராமரிப்புத் துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த நரேஷ் பால் கங்வார் ஐ.ஏ.எஸ், கிராமப்புற வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளராக இருக்கும் கர்நாடக பிரிவைச் சேர்ந்த டி.கே.அனில் குமார் ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரும் புதிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது கல்வித் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட நரேஷ் பால் கங்வார் ஐ.ஏ.எஸ், வேளாண்மைத் துறைச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், தேசிய தோட்டக்கலை வாரியத்தின் (NHB) தோட்டக்கலை மானியமாக ரூ.1.16 கோடிக்கும் அதிகமான தொகையை அவரது மனைவி, தாய் மற்றும் மகன் ஆகியோர் பெயரில் பெற்று மோசடி செய்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், ``பிரதமர் மோடிக்குத் தன்னை மறைத்துக் கொள்ளத் தூய்மையான முகங்கள் தீர்ந்துவிட்டன. வினீத் ஜோஷியைப் பாதுகாப்பதற்காக, விசாரணை செய்யப்பட வேண்டிய ஒருவரையே புதிய கல்வித் துறைச் செயலாளராக நியமித்துள்ளார். நரேஷ் பால் கங்வார் வேளாண் செயலாளராக இருந்தபோது, அவருடைய மனைவி, தாய் மற்றும் மகன் ஆகியோர் இணைந்து ரூ.1.16 கோடிக்கும் மேல் தேசிய தோட்டக்கலை வாரிய மானியங்களைப் பெற்றுள்ளனர். இந்த அரசாங்கத்தில் ஊழல் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு இதுவே சான்று" என்று குறிப்பிட்டுள்ளார்.

CJP அபிஜித் தீப்கே
CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

அதைத் தொடர்ந்து CJP நிறுவனர் அபிஜித் தீப்கே தன் எக்ஸ் பக்கத்தில், ``அரசாங்கம் தவறு செய்தவர்கள் பொறுப்பேற்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக, ஊழலுக்கு வெகுமதி அளித்துக்கொண்டிருக்கிறது! நேற்று இரவு, கல்வித் துறைச் செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள விலங்கு நலத் துறையைச் சேர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வினாத்தாள் கசிவு, நீர் தேர்வு முறைகேடு என்பது ஏதோ ஒரு தனிநபர் செய்த தவறு அல்ல.

தேர்வு நடத்தும் ஒட்டுமொத்த அமைப்பிலும், அதன் அதிகார வர்க்கத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ள முறைகேடாகும். ஆனால், ஒரு அதிகாரியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்றொரு அதிகாரியை நியமிப்பது இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களை நேரடியாக அவமதிக்கும் செயல்.

அரசு நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் "சமரசம்" இதுதானா? இது பொறுப்பேற்பு கிடையாது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நாங்கள் ஓய்வு பெற மாட்டோம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கோவை: `நீட் எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்த தமிழ்நாடு; ரத்து செய்யப்படும்வரை...'- இளைஞர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் காக்ரோச் ஜனதா கட்சியினரும் நீட் எதிர்ப்பாளர்களும் மூன... மேலும் பார்க்க

தூத்துக்குடி இளைஞர் லாக்கப் மரணம்: "பதவி மமதை கண்ணை மறைக்கிறதா முதல்வரே?" - சீமான் கண்டனம்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜூலை 23) உய... மேலும் பார்க்க

CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' - ஜே.பி.நட்டா

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும். இன்று மதியம் காக்ர... மேலும் பார்க்க

வகுப்புகள் புறக்கணிப்பு; ஜந்தர் மந்தர் பாணி திரள்! - சென்னையில் வேகமெடுக்கும் காக்ரோச் போராட்டம்?

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான மாணவர்கள் போரட்டம், தமிழகத்திலும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு, தொ... மேலும் பார்க்க

களம் : தில்லி அதிரும் போராட்டங்கள் - 'ஜென் ஜி தலைமுறையின் இன்னொரு முகம்' | இரா.சிந்தன்

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

`மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி'- ஆசிரியராக மாறிய ஓய்வுபெற்ற IPS

பொதுவாக அரசு அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் முன்னாள் டி.ஜி.பி சீமா அகர்வால் ஐ.பி.எஸ், ஓய்வ... மேலும் பார்க்க