செய்திகள் :

`மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி'- ஆசிரியராக மாறிய ஓய்வுபெற்ற IPS

post image

பொதுவாக அரசு அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் முன்னாள் டி.ஜி.பி சீமா அகர்வால் ஐ.பி.எஸ், ஓய்வை ஓரமாக வைத்து, அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணியைத் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக மாற்றியிருக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வரும் அவரது இந்த முயற்சி, பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தத் தொடங்கியுள்ள சீமா அகர்வாலிடம் இது குறித்து பேசினோம்.

“ஓய்வுபெற்ற பிறகு வீட்டில் அமைதியாக இருப்பதை நான் விரும்பவில்லை. சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது. பல சிரமங்களுக்கும் பொருளாதாரக் குறைகளுக்கும் மத்தியில்தான் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

ஓய்வுபெற்ற டிஜிபி சீமா அகர்வால் IPS

அந்தக் குழந்தைகளின் பெற்றோரில் பலரால் வீட்டில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

அதனால்தான் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களை கற்பித்து வருகிறேன். உண்மையில், இந்தப் பணி எனக்கு ஓய்வை விட அதிகமான மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மாணவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வமாகக் கேட்டு கற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது, நான் செய்த இந்தத் தேர்வு சரியானது என்ற திருப்தி ஏற்படுகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பணியில் இருந்த காலத்திலேயே, ஆயிரம் விளக்கு பகுதிக்குட்பட்ட சில அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்குப் பாடம் எடுத்த அனுபவமும் இவருக்கு உள்ளது. தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து பாடம் நடத்தி வருகிறார்.

1990-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான சீமா அகர்வால், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் டி.ஜி.பி-யாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுக்குப் பிறகும் சமூகப் பொறுப்பைக் கைவிடாமல் கல்வி மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பது, பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

மீண்டும் தொடங்கிய ட்ரம்பின் 'வரி' ஆட்டம்; இந்தியாவிற்கு சற்று குறைந்த வரி தான் - ஏன்? | Trump Tariff

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் போரையும் விடுவதாக இல்லை... வரியையும் விடுவதாக இல்லை போலும். 'அமெரிக்க பொருள்களுக்கு தங்கள் நாடுகளில் அதிக வரியை வசூலிக்கிறார்கள்' என்று ட்ரம்ப் அரசு, 2025-ம் ஆண்டு ஏப்ரல்... மேலும் பார்க்க

பெரம்பூர்: பிரசித்தி பெற்ற கோயில் எதிரே இயங்கும் டாஸ்மாக்; பட்டியல் `717'-லிருந்து தப்பியது எப்படி?

`பள்ளிக் கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே அமைந்திருக்கும் மதுபானக் கடைகள் அங்கிருந்து உடனடியாக அகற்றப்படும்.' - தவெக அரசு பதவியேற்ற அடுத்த சில தினங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார், முதல்வர... மேலும் பார்க்க

"இது சினிமா கிடையாது; Scene பண்ணுவதற்கு"- தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூலை.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நீட் போராட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள், நிலைப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பன குறித்து ஓட்டு போட... மேலும் பார்க்க

அமமுக MLA காமராஜுக்கு புதிய சிக்கல் - தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் கட்சி சார்பில் மனு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி, அக்கட்சி சட்டப்பேரவை சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ள... மேலும் பார்க்க

காவிரி நீர் : டி.கே. சிவக்குமாரை நேரில் சந்திக்கும் விஜய்! - பலனளிக்குமா முதல்வரின் முயற்சி? | அலசல்

காவிரி நதிநீர் பிரச்னை என்பது தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான நீண்டகால நதிநீர் பங்கீட்டு தகராறாக மட்டுமல்லாமல், இரு மாநிலங்களின் அரசியல், விவசாயம், கூட்டாட்சி உறவு மற்றும் நீதித்துறை ஆகிய அனைத்தையும் உள... மேலும் பார்க்க

நீட் போராட்டம்: "உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?" - டெல்லி பல்கலைகழகத்திற்கு ராகுல் கண்டனம்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரகணக்கான மாணவர்கள் தொடர் போர... மேலும் பார்க்க