செய்திகள் :

"திரைப்படக் கலைஞர்கள் மக்களின் வலியைப் பேச உரிமை உண்டு; ஆனால், திசை திருப்பக் கூடாது" - சீனு ராமசாமி

post image

டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, நேற்று (ஜூலை 23), நீலம் மாணவர் இயக்கம் சார்பாக சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசையும் மறைமுகமாகச் சாடியிருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
இயக்குநர் சீனு ராமசாமி

"திரைப்படக் கலைஞர்கள் மக்களின் வலியைப் பேசவும், அவர்களின் கனவுகள் நசுக்கப்படுவதைத் தட்டிக் கேட்கவும் பூரணமான தார்மீக உரிமை உண்டு.

ஆயினும் கலைஞர்களும் உணர்ச்சிவசப்பட்டு இப்போராட்டத்தின் திசையைத் திருப்பிவிடக்கூடாது என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு சொல்லும் நம்மை வெளிக்காட்டுபவை. அதற்குப் பொருளுண்டு.

நீட் தேர்வு என்பது திறமையை அளக்கும் கோல் என்று சொல்வது எளிது. ஆனால், கோடிக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வைக்கும் பயிற்சி மையங்களின் வாசலில் நிற்கக்கூட முடியாத கிராமத்து ஏழை மாணவனின் தவிப்பை யார் புரிந்துகொள்வது?

அரசுப் பள்ளி மாணவர்களின் ஒற்றைக் கனவை அந்த வணிக வளாகங்கள் எப்படி நசுக்குகின்றன என்பதை இந்தச் சமயம் யோசிக்க வேண்டும்.

மருத்துவ இடங்களும் கல்லூரிகளும் பெருகியிருப்பதைக் காட்டிவிட்டு, அது நீட்டின் மகத்துவம் என்று வாதிடுவது யதார்த்தத்தை மறைக்கும் வேலை.

மருத்துவக் கட்டமைப்பு வளர்வதும், மருத்துவ இடங்கள் அதிகரிப்பதும் இந்த நாட்டின் கட்டமைப்பும் மக்களின் தேவையும்தானே தவிர, நுழைவுத் தேர்வின் கருணை அல்ல.

நீட் இல்லாமலும் இந்த இடங்கள் விரிவுபடுத்தப்பட்ட வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.

அதனால்தான், மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் சந்திரசேகர் அவர்கள் குறிப்பிடுவது போல, கல்வி என்பது மத்திய அரசின் கைப்பிடிக்குள் சுருங்கிவிடக் கூடாது.

அது மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது.

ஒவ்வொரு மாநிலத்தின் மண்ணுக்கேற்ற கல்வி முறை இருக்கையில் அதை கணக்கில் எடுக்காமல் அந்தந்த மக்களின் துடிப்பும் புரியாமல் மத்தியிலிருந்து திணிக்கப்படும் தேர்வு முறைகள் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரை அசைக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய கருத்து இது."

"நான் முதலிலிருந்தே மாணவர்களுடன் தான் நிற்கிறேன்" - மம்தா பானர்ஜி

haடெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் குறித்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... "நான் முதலிலிருந்தே மாணவர்களுடனும் அவர்களின் போராட்ட... மேலும் பார்க்க

தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை; வினாத்தாள் கசிவு விசாரிக்க விரைவு நீதிமன்றம்? - சிதம்பரம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்திய பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் சீனியர் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்... மேலும் பார்க்க

கோவை: `நீட் எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்த தமிழ்நாடு; ரத்து செய்யப்படும்வரை...'- இளைஞர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் காக்ரோச் ஜனதா கட்சியினரும் நீட் எதிர்ப்பாளர்களும் மூன... மேலும் பார்க்க

தூத்துக்குடி இளைஞர் லாக்கப் மரணம்: "பதவி மமதை கண்ணை மறைக்கிறதா முதல்வரே?" - சீமான் கண்டனம்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜூலை 23) உய... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: ``இளைஞர்களை நேரடியாக அவமதிக்கும் செயல்" - பாஜக அரசுக்கு CJP கடும் கண்டனம்!

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, ``நீட் குளறுபடிகள் ... மேலும் பார்க்க

CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' - ஜே.பி.நட்டா

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும். இன்று மதியம் காக்ர... மேலும் பார்க்க