ரிஸ்க் எடுக்காமல் பணக்காரர் ஆக முடியுமா? Ergodicity என்றால் என்ன?
சரியும் சந்தையிலும் லாபகரமான முதலீடு... வழிகாட்டும் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி
எல்லோருக்கும் சம்பள வருமானத்தைத் தாண்டி பணம் சம்பாதிக்கும் ஆர்வம் உள்ளது. நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட, இரு மடங்குக்கு மேல் அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதல் இடத்தில் இருப்பது பங்குச் சந்தை என்கிற ஷேர் மார்க்கெட் ஆகும். ஷேர் மார்க்கெட்டில் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டுவருகிறார்கள்.
நிறுவனப் பங்குகளை ஒரு முதலீட்டுக் கலவையாக (போர்ட்ஃபோலியோ) வாங்கிச் சேர்க்கும்போதுதான் அது அதிக லாபகரமானதாக இருக்கிறது. அந்தப் பங்கு முதலீட்டுக் கலவையை எப்படி லாபகரமாக உருவாக்குவது என்ற பயிற்சியை நாணயம் விகடன் 'ஃபண்டமென்டல் அனாலிசிஸ்' வகுப்பின் மூலம் வழங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பை முன்னணி பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகர் நடத்த உள்ளார்.

இவர் ஆனந்த் ரதி, ஐ.டி.பி.ஐ கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பி.ஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். நாணயம் விகடனில் இவர் பரிந்துரையாகக் கொடுத்த பல பங்குகள் பல மடங்கு லாபத்தைக் கொடுத்திருந்தன.
ஏ.கே.பிரபாகர் எடுக்க உள்ள இந்தப் பயிற்சி வகுப்பு குறித்த விவரங்கள்:
‘ஷேர் மார்க்கெட் ஃபண்டமென்டல் அனாலிசிஸ்’ - லாபகரமான பங்கு முதலீட்டுக்கான வழிகாட்டி
நாள்: 2026 ஆகஸ்ட் 8-ம் தேதி, சனிக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: சென்னை
இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.6,500.
பதிவு செய்ய: https://tinyurl.com/5er4sbzh
இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கு சந்தை குறித்த முதலீட்டாளர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அவர் விரிவாக விளக்கம் அளிக்க உள்ளார்.
(பயிற்சி வகுப்பின் போது தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்)















