செய்திகள் :

பேராசிரியையுடன் நெருக்கம்; போட்டோ, வீடியோவை கணவருக்கு அனுப்பிய பேராசிரியர் - விசாரிக்கும் போலீஸ்!

post image

திருச்சி, திருவெறும்பூர் அருகே தேசிய தொழில்நுட்ப கழகம் இயங்கி வருகிறது. அங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பேராசிரியராக ஜெரால்டு (வயது: 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், என்.ஐ.டி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜெரால்டு தனது செல்போனில் எடுத்து வைத்திருந்தார். கடந்தாண்டு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், இருவரும் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தனர். இதனிடையே, கடந்த வாரம் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ஜெரால்டு, அந்த பேராசிரியையின் கணவர் மற்றும் சில மாணவர்களின் செல்போன்களுக்கு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

trichy

இதனால், அதிர்ச்சியடைந்த பேராசிரியை, திருச்சி சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஜெரால்டு மீது திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் இருந்த ஜெரால்டை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் ஒரு லாக்கப் மரணம்?:``படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்"- உதயநிதி கண்டனம்

தூத்துக்குடி, அமுதா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (26). இவர் அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி மதுபான கடை மூடிய பின்பு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மீண்டும் ஒரு காவல் மரணம்?- விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு வீடு திரும்பியவர் இறப்பு

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

திருச்சி: சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியின் கட்டை விரலைக் கடித்த எலி - அரசு மருத்துவமனை அவலம்!

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் கொடி (வயது: 60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்... மேலும் பார்க்க

”ரத்து செய்யப்பட்ட பவரில் நிலம் ரிஜிஸ்ட்ரேஷன்”- பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(42). இவருடைய தந்தை பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமாக 65 குழி நிலம் இருந்தது. இந்த நிலத்தைப் பராமரிப்பதற்காக, பட்டுக்கோட்டை பாக்... மேலும் பார்க்க

2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் வைப்பு தொகை, வீடுகள்! - ரூ.150 கோடிக்கு சொத்து குவித்த எஞ்சினியர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் எஞ்சினியராக இருப்பவர் முத்யம் வெங்கட ரமணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்தது. இதை... மேலும் பார்க்க

திருச்சி: வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதா கைது!

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி ( 30) என்பவரின் தந்தை கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மைய... மேலும் பார்க்க