செய்திகள் :

Ban NEET போராட்டம்: ``நம்மை மீண்டும் கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி" - இயக்குநர் வெற்றிமாறன்

post image

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ``நாம் மேற்கொள்ளும் போராட்டம் என்பது வெறும் 'நியாயமான நீட் தேர்வுக்காக' (Fair NEET) இருக்கக் கூடாது. அது 'நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பதற்கான' (Ban NEET) போராட்டமாக மாற வேண்டும்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

இதற்கான முன்னெடுப்புகளை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்த்து, தொடர்ந்து போராட வேண்டும். என் நண்பர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நேரில் பார்க்கும் போது, நீட் தேர்வு மாணவர்களுக்குத் தரும் அழுத்தத்தை என்னால் உணர முடிகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற, பாடங்களை ஆழமாகப் புரிந்து படிக்கக்கூடிய திறமையான மாணவர்களால் கூட முதல் முயற்சியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை. இரண்டாவது முறை எழுதியும், அவர்களது பெற்றோரால் கட்டணம் செலுத்தக்கூடிய வகையிலான மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழலே நிலவுகிறது.

அதேபோல, பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுப் பல மாணவர்கள் ஓராண்டு காலம் வீடே கதி என அமர்ந்து இத்தேர்வுக்குப் படிக்கும் நிலையைக் காண்கிறோம். நீட் தேர்வின் முதன்மை நோக்கம், நம்மிடமிருந்து மருத்துவக் கல்வியையும் மருத்துவ அறிவையும் முழுமையாகப் பறிப்பதுதான். நம்மை மீண்டும் அவர்களிடம் கைகட்டி நிற்கும் நிலைக்குத் தள்ளுவதற்கான முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். எனவே, நீட் ஒழிப்புக்கான குரலை நாம் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

களத்தில் இறங்கித் தொடர்ந்து போராடும் களப் பணியாளர்களுடனும், செயல்பாட்டாளர்களுடனும் நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம். இம்முறை இந்தப் போராட்டம் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற வேண்டும். நீட் ஒழிப்புக்கான இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள 'நீலம் மாணவர்கள் அமைப்புக்கு' எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பேன். அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை ஒழிக்கக் கைகோர்ப்போம்." எனப் பேசியிருக்கிறார்.

Ban NEET போராட்டம்: ``இதுதான் என் முதல் போராட்டம்" - நடிகை ஆண்ட்ரியா

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்... மேலும் பார்க்க

தூத்துக்குடி விசாரணைக் கைதி உயிரிழப்பு: 'சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்'- அன்புமணி ராமதாஸ்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம், ... மேலும் பார்க்க

"பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் நேர்மை இல்லை.!" - சோனம் வாங்சுக் மனைவி சாடல்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங... மேலும் பார்க்க

`தமிழக காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பதில் சொல்லணும்' - உ.வாசுகி

தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ப... மேலும் பார்க்க

தற்கொலை நல்லது | உளவன் 10

உளவன் 10 தற்கொலை நல்லதுவெளியுலகுக்கு தெரியாமல் ரகசியமாக செயல்படும் அலுவலகம். காற்றும் வெளிச்சமுமில்லாத கூண்டு அது. மூச்சு முட்டச் செய்யும் அறை. கசகசப்பும் இறுக்கமும் அங்கு இயல்பு. இதனோடு தலைவர் மாண்டே... மேலும் பார்க்க

'MGR ரெபரன்ஸ்; திமுக அட்டாக்; வெறுப்பரசியலின் பின்னணி!' - 'ஜனநாயகன்' யாரையெல்லாம் அட்டாக் செய்கிறது?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்'. விஜய் கட்சி ஆரம்பித்த பிறகே 'ஜனநாயகன்' படத்தின் சூட்டிங் தொடங்கியது. அதனால் ஆரம்... மேலும் பார்க்க