செய்திகள் :

Ban NEET போராட்டம்: ``இதுதான் என் முதல் போராட்டம்" - நடிகை ஆண்ட்ரியா

post image

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, ``இதான் என் முதல் போராட்டம். கடந்த ஒரு வாரமாக நான் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

மாணவர்கள் போராட்டம் எங்கோ ஒரு இடத்தில் நடக்கிறது என்றாலும் நாம் இங்கு உணர்வுப்பூர்வமாக மிகவும் ஒன்றிப்போயிருக்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த ரவீந்திரநாத் தாகூரின் கவிதையிலிருந்து சில வரிகளை மட்டும் இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

`எங்கு மனது அச்சமின்றி இருக்கிறதோ, எங்கு தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கு அறிவு அனைவருக்கும் விலையின்றிச் சுதந்திரமாகக் கிடைக்கிறதோ... அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில், என் தந்தையே, என் தேசம் விழித்தெழட்டும்' - அறிவு அனைவருக்கும் விலையின்றி கிடைக்கவேண்டும்.

அறிவு என்பது நமது பிறப்புரிமை. அதைத் தான் இந்த வரிகள் உணர்த்துகின்றன. நமது மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அறிவை இந்த நீட் அமைப்பு மறுக்குமேயானால், அந்த அமைப்பை நாம் திருத்தியாக வேண்டும். நான் இங்கு நீண்ட உரை நிகழ்த்தத் தயாராக வரவில்லை, எனவே என்னை இங்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. ஆனால், நான் எப்போதும் மாணவர்களின் பக்கமே உறுதியாய் நிற்பேன். மனதின் சுதந்திரமே ஒரு மனிதனின் உண்மையான வாழ்வியலுக்கான சான்று." என உரையாற்றினார்.

Ban NEET போராட்டம்: ``அனிதாவின் அண்ணனாகத்தான் தலைமைச் செயலகம் முன்பு நின்றேன்" - பாடகர் அறிவு

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்... மேலும் பார்க்க

Ban NEET போராட்டம்: `அரசியல் கட்சிகளோ தலைவர்களோ காப்பாற்றுவார்கள் என நம்பக் கூடாது'- இயக்குநர் அமீர்

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்... மேலும் பார்க்க

Ban NEET போராட்டம்: ``நம்மை மீண்டும் கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி" - இயக்குநர் வெற்றிமாறன்

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்... மேலும் பார்க்க

தூத்துக்குடி விசாரணைக் கைதி உயிரிழப்பு: 'சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்'- அன்புமணி ராமதாஸ்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம், ... மேலும் பார்க்க

"பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் நேர்மை இல்லை.!" - சோனம் வாங்சுக் மனைவி சாடல்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங... மேலும் பார்க்க

`தமிழக காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பதில் சொல்லணும்' - உ.வாசுகி

தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ப... மேலும் பார்க்க