செய்திகள் :

"பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் நேர்மை இல்லை.!" - சோனம் வாங்சுக் மனைவி சாடல்

post image

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 26-வது நாளை எட்டியிருக்கிறது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் அங்கிருந்தே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார்.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

இதனிடையே இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் இல்லம் அருகே நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை குண்டுகட்டாகத் தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் உடன் இருந்த காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் குறித்து சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி பேசியிருக்கிறார்.

"பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் நேர்மை இல்லை. பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழிப்படைந்த இந்தியா.

நேர்மையற்றவர்களை நாட்டின் இளைஞர்கள் தூக்கி எறிவார்கள். ஒவ்வொரு அரசியல் தலைவரும் வார்த்தைகளோடு நிற்காமல் அதைச் செயலில் காட்ட வேண்டும் என்பதை இந்த இயக்கம் உணர்த்தியுள்ளது.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

இனி அவர்கள் தவறான தகவல்களைக் கூறி ஏமாற்றவோ அல்லது நேர்மையின்றி நடக்கவோ முடியாது. எங்களைப் பொறுத்தவரை இங்கு எதிர்க்கட்சியும் இல்லை, ஆளும் அரசாங்கமும் இல்லை.

எங்களைப் பொறுத்தவரை நாடாளுமன்றமே நாட்டின் மிக உயர்ந்த அமைப்பு. நாடாளுமன்றம் கல்வியை ஒரு அடிப்படைப் பிரச்சனையாகக் கருதி கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

சுயநல நோக்கங்களுடன் யார் வந்தாலும் அவர்கள் வழியிலேயே வீழ்வார்கள். ஏனெனில் இந்த இயக்கம் தூய்மையான எண்ணத்திலிருந்தும் நேர்மையிலிருந்தும் உருவானது"என்று எதிர்கட்சியை சாடியிருக்கிறார்.

Ban NEET போராட்டம்: ``நம்மை மீண்டும் கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி" - இயக்குநர் வெற்றிமாறன்

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்... மேலும் பார்க்க

தூத்துக்குடி விசாரணைக் கைதி உயிரிழப்பு: 'சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்'- அன்புமணி ராமதாஸ்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம், ... மேலும் பார்க்க

`தமிழக காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பதில் சொல்லணும்' - உ.வாசுகி

தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ப... மேலும் பார்க்க

தற்கொலை நல்லது | உளவன் 10

உளவன் 10 தற்கொலை நல்லதுவெளியுலகுக்கு தெரியாமல் ரகசியமாக செயல்படும் அலுவலகம். காற்றும் வெளிச்சமுமில்லாத கூண்டு அது. மூச்சு முட்டச் செய்யும் அறை. கசகசப்பும் இறுக்கமும் அங்கு இயல்பு. இதனோடு தலைவர் மாண்டே... மேலும் பார்க்க

'MGR ரெபரன்ஸ்; திமுக அட்டாக்; வெறுப்பரசியலின் பின்னணி!' - 'ஜனநாயகன்' யாரையெல்லாம் அட்டாக் செய்கிறது?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்'. விஜய் கட்சி ஆரம்பித்த பிறகே 'ஜனநாயகன்' படத்தின் சூட்டிங் தொடங்கியது. அதனால் ஆரம்... மேலும் பார்க்க

Ban NEET Vs Fair NEET:`நீட் தேர்வு திருத்தமா அல்லது முழுமையான ரத்தா?'- போராட்டம் செல்லும் பாதை என்ன?

டெல்லி: மாணவர்களின் போராட்டம்நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. கடந்த 20-ம் த... மேலும் பார்க்க