செய்திகள் :

தூத்துக்குடி விசாரணைக் கைதி உயிரிழப்பு: 'சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்'- அன்புமணி ராமதாஸ்

post image

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணியும் குரல் கொடுத்திருக்கிறார்.

அருணாச்சலம்
அருணாச்சலம்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தூத்துக்குடி நகரம், தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால், சட்டவிரோதமாக மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் தலை உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அருணாச்சலத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மது வணிகம் செய்ததாக கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அருணாச்சலம் அன்று மாலையே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவலர்கள் மூவர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக அவர்கள் அளித்த காணொலி வாக்குமூலத்தையும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது அருணாச்சலம் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு உறுதியாவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

தூத்துக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட போது நன்றாக இருந்த அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

ஏற்கனவே நாகர்கோயில் கிளைச் சிறையில் சபரிநாதன் என்ற விசாரணைக் கைதி சிறைத்துறையினரால் தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதட்டம் தீரும் முன்பே இன்னொரு விசாரணைக் கைது மர்மமான முறையில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Ban NEET போராட்டம்: ``நம்மை மீண்டும் கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி" - இயக்குநர் வெற்றிமாறன்

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்... மேலும் பார்க்க

"பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் நேர்மை இல்லை.!" - சோனம் வாங்சுக் மனைவி சாடல்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங... மேலும் பார்க்க

`தமிழக காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பதில் சொல்லணும்' - உ.வாசுகி

தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ப... மேலும் பார்க்க

தற்கொலை நல்லது | உளவன் 10

உளவன் 10 தற்கொலை நல்லதுவெளியுலகுக்கு தெரியாமல் ரகசியமாக செயல்படும் அலுவலகம். காற்றும் வெளிச்சமுமில்லாத கூண்டு அது. மூச்சு முட்டச் செய்யும் அறை. கசகசப்பும் இறுக்கமும் அங்கு இயல்பு. இதனோடு தலைவர் மாண்டே... மேலும் பார்க்க

'MGR ரெபரன்ஸ்; திமுக அட்டாக்; வெறுப்பரசியலின் பின்னணி!' - 'ஜனநாயகன்' யாரையெல்லாம் அட்டாக் செய்கிறது?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்'. விஜய் கட்சி ஆரம்பித்த பிறகே 'ஜனநாயகன்' படத்தின் சூட்டிங் தொடங்கியது. அதனால் ஆரம்... மேலும் பார்க்க

Ban NEET Vs Fair NEET:`நீட் தேர்வு திருத்தமா அல்லது முழுமையான ரத்தா?'- போராட்டம் செல்லும் பாதை என்ன?

டெல்லி: மாணவர்களின் போராட்டம்நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. கடந்த 20-ம் த... மேலும் பார்க்க