செய்திகள் :

தங்கமயில் ஜுவல்லரியின் 26-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்!

post image

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 66 கிளைகள் வாயிலாக நகை விற்பனைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் 26வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (Annual General Meeting – AGM) 29.07.2026 அன்று மதுரையில் நடைபெற்றது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பலராம கோவிந்ததாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2025–26 நிதியாண்டிற்கான இயக்குநர்கள் அறிக்கை, தணிக்கையிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் வணிக செயல்திறன் குறித்து பங்குதாரர்களிடம் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி, வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, புதிய முயற்சிகள், டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறிய அவர், தரம், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவையையே தங்கமயிலின் வளர்ச்சிக்கான அடித்தளமாக நிறுவனம் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இணை நிர்வாக இயக்குநர்களான திரு. Ba.ரமேஷ் மற்றும் திரு. N.B.குமார் ஆகியோர் கலந்து கொண்டு, நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி நோக்கு, வணிக விரிவாக்க உத்திகள், வாடிக்கையாளர் சேவை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பங்குதாரர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், நிறுவனச் செயலாளர் திரு. CS K. நாராயணன், தலைமை நிதி அதிகாரி Mr.B.ராஜேஸ்கண்ணா, நிறுவனத்தின் துணைத் தலைவர்கள், பொது மேலாளர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்குழுக் கூட்டத்தில், நிறுவனத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் பல்வேறு தீர்மானங்கள் பங்குதாரர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. மேலும், நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சி, பங்குதாரர்களுக்கான மதிப்பூட்டல் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில், நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்து வரும் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள் அனைவருக்கும் நிறுவன நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.

ரத்தினம் என்பது ஒளிரும் கல் மட்டுமல்ல; அது தலைமுறைகள் போற்றும் பாரம்பரியத்தின் பிரகாசமான சின்னம்!

இயற்கையின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்குவது ரத்தினக் கற்கள் ( Gemstones ). ஆயிரம் ஆண்டுகளாக அழகு, செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டு வருகின்றன.அவற்றின் தனித்துவமான நிறம... மேலும் பார்க்க

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறை ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனம் அறிமுகம்!

ரோபோடிக் அறுவைசிகிச்சையில் பத்தாண்டு கால நிபுணத்துவம் கொண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சிகிச்சை தரங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு, நவீன Toumai™ MT-1000 Pro ரோபோடிக் அறுவைசிகிச்... மேலும் பார்க்க

தனிஷ்க்: மல்லிகைப் பூவால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட 'நறுமுகை' அன்கட் வைர ஆபரணத் தொகுப்பு அறிமுகம்

மல்லிகைப் பூவின் காலத்தால் அழியாத அழகால் ஈர்க்கப்பட்டு, பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வைர ஆபரணத் தொகுப்பு 'நறுமுகை', தென்னிந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபரணப் பாரம்பரியத்தை நவீன 'அன்கட்' (Unc... மேலும் பார்க்க

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவர் ஆர். பூமிநாதனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்திய உயர்கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர். பூமிநாதன் விருந்தோம்பல் (Hospitality) கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் சேவையைப் பாராட... மேலும் பார்க்க

மதுரையில் பிரமாண்ட அச்சு-பேக்கேஜிங் எக்ஸ்போ! 180+ ஸ்டால்களில் உலகளாவிய பிராண்ட் இயந்திரங்கள் சங்கமம்

மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (Madurai District Tiny & Small Scale Industries Association - MADITSSIA) நடத்தும் 11ஆவது தி பிரிண்ட் என் பேக் 2026 ( The Print N Pack 2026) கண்காட்ச... மேலும் பார்க்க

'ஆண்களை முந்திய பெண்கள்' - Start-up நிறுவனங்கள் நடத்துவதில் சாதனை; இந்தியளவில் தமிழ்நாடு முன்னிலை!

தமிழகத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் புத்தொழில் (Startup) நிறுவனங்களைத் தொடங்கி சாதித்து வருகின்றார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப... மேலும் பார்க்க