செய்திகள் :

கோவையில் நடிகர் ராம் சரணுக்கு நடந்த அறுவை சிகிச்சை; டிஸ்சார்ஜ் எப்போது?

post image

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த, 'பெத்தி' என்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.

பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு நடிகர் ராம் சரண் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் வருகை தந்தார். பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராம் சரண்
ராம் சரண்

இதையடுத்து நேற்று அம்மருத்துவமனை தலைவரும், எலும்பியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் எஸ். ராஜசேகரன் தலைமையில் ராம் சரணுக்கு இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சிகிச்சையின்போது, நடிகர் சிரஞ்சீவி, சுரேகா கொனிடேலா மற்றும் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உடனிருந்தனர்.

இந்த நிலையில் ராம் சரணுக்குச் சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், ராம் சரண் தற்போது நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் ராம் சரண், வருகின்ற 30ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராம் சரண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

"'பகவந்த் கேசரி' பார்த்துட்டு விஜய் சார் என்கிட்ட பேசிய விஷயம்..." - 'பகவந்த் கேசரி' இயக்குநர்!

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்த... மேலும் பார்க்க

'ஆங்கிலம் தெரியாமல் இருந்தபோது என்னை கேலி செய்தனர்; ஆனால்..!'- கசப்பான சம்பவத்தை பகிர்ந்த பாக்யஸ்ரீ

நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் 'காந்தா' படத்தின் மூலம் அனைவர... மேலும் பார்க்க

Allu Arjun: 'மீண்டும் டைரக்ஷன்'- அல்லு அர்ஜூன் படத்தை இயக்குகிறாரா பேசில் ஜோசப்?

நடிகர் பேசில் ஜோசப் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான வேலையில் பரபரப்பாக இருந்துவருகிறார். கடந்த மே மாதம் இவர் நடித்திருந்த 'அதிரடி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ... மேலும் பார்க்க

Bhagyasri : "அன்று என் அப்பா வேலைக்காக கெஞ்சியதை பார்த்திருக்கிறேன்!" - உருகும் பாக்யஸ்ரீ போர்ஸ்

டோலிவுட் நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் புரோமோஷனில் பாக்யஸ்ரீ ... மேலும் பார்க்க

Jr NTR: அரசியலுக்கு வருகிறாரா ஜூனியர் என்.டி.ஆர்!? - என்ன சொல்கிறது அவரின் குழு?

டோலிவுட் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசியலோடு நீண்ட காலத் தொடர்பு உண்டு. அதனால் தான், அவரைப் பற்றி வெளியாகும் சிறு அரசியல் செய்திகூட பெரும் வைரலாகப் பேசப்படுகிறது. சமீபத்தில், ... மேலும் பார்க்க

Samantha: `கிளாமருக்கு மட்டும்தான் ஹீரோயினா?; சாதித்த `மா இன்டி பங்காரம்' - சமந்தா நெகிழ்ச்சி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது... மேலும் பார்க்க