செய்திகள் :

மேகதாது: `நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசு; கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா?' - அண்ணாமலை

post image

நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் நாடாளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, "காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, தமிழ்நாட்டைக் கடந்து செல்லும் ஏனைய பிற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைக் கர்நாடக மாநிலம் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி
இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி

16.02.2018 நாளிட்ட தனது உத்தரவில், 2007-ஆம் ஆண்டின் காவிரி நீர் நடுவர் மன்றத் தீர்ப்பின் (CWDT Award) XVIII-வது பிரிவை உகந்ததாக ஏற்றுக் கொண்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றம், "இந்த நடுவர் மன்றத்தின் உத்தரவில் உள்ள எதுவும், எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கோ அல்லது இந்நடுவர் மன்றத்தின் உத்தரவிற்கு முரண்படாத வகையில் அம்மாநிலத்திற்குள் கிடைக்கும் நீரின் பயனை அடைவதற்கோ உள்ள உரிமை, அதிகாரம் அல்லது அதிகார வரம்பைப் பாதிக்காது" என்பதைத் தனது உத்தரவில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து We The Leaders தலைவர் அண்ணாமலை பதிவு:

"கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?

தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்".

மேகதாது விவகாரம்: ``கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில்..."- முதல்வருக்கு உதயநிதி கண்டனம்

தமிழ்நாட்டுக்கும் - கர்நாடகாவுக்கும் மத்தியில் மேகதாது அணை விவகாரம் தீவிரமாகிவருகிறது. இது தொடர்பாக பா.ம.க எம்.பி அன்புமணி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜல... மேலும் பார்க்க

கரூர் பணி ஆணை ரத்து விவகாரம்: `நீதிமன்ற உத்தரவு நகல் வந்தவுடன்...'- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை சீரமைக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை ஐஐடி-யில் மின்சாரத்துறை அமைச்சர், லித்தியம், வெனாடியம் மற்றும் சோடியம் பேட்டரி தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``ஒரு செங்கல்லை வைக்கக்கூட முதல்வர் அனுமதிக்க மாட்டார்" - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக,... மேலும் பார்க்க

நெல்லை: பள்ளி மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் - சாதிய மோதலா? தீவிர விசாரணை!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப... மேலும் பார்க்க

பட்டம் டு தமிழ்த்தாய் வாழ்த்து.! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, இன்று காலை தொடங்குவதற்கும் முன்பே இரண்டு முக்கிய விவகாரங்களால் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பாக ம... மேலும் பார்க்க

பீகார்: 'ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்' மாணவர் போராட்டத்தில் காவலர் கையில் AK-47 - என்ன நடந்தது?

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை எதிர்த்து பீகாரில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) 'பீகார் பந்த்' என்கிற பெயரில் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த ஜூலை 25-ம் தேதி, பீகாரின் சிவான் மாவட்டத்த... மேலும் பார்க்க