செய்திகள் :

மேகதாது விவகாரம்: ``ஒரு செங்கல்லை வைக்கக்கூட முதல்வர் அனுமதிக்க மாட்டார்" - அமைச்சர் செங்கோட்டையன்

post image

அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வெப்ப அலை தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பாகக் கட்டடத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை குறைவாக இருக்கும் சூழலில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்கவும், கால்நடைகள் மற்றும் விவசாயத்தைப் பாதுகாக்கவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளவும் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன.

முதல்வர் விஜய்

முதற்கட்டமாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில், ரூ. 55 கோடியில் புதிய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற வெப்ப மண்டல மாவட்டங்களுக்குத் தேவையான சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் பேரில் முதல்வர் முடிவெடுப்பார்.

மேகதாது அணை கட்டுவதற்குத் தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. ஆனால், காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்க அனுமதிக்காது. சென்னையில் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து மழைநீர் வடிகால் பணிகளை அதிவேகமாக மேற்கொண்டு வருகின்றன. பருவமழை தொடங்குவதற்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடையும்" என்றார்.

மேகதாது விவகாரம்: ``கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில்..."- முதல்வருக்கு உதயநிதி கண்டனம்

தமிழ்நாட்டுக்கும் - கர்நாடகாவுக்கும் மத்தியில் மேகதாது அணை விவகாரம் தீவிரமாகிவருகிறது. இது தொடர்பாக பா.ம.க எம்.பி அன்புமணி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜல... மேலும் பார்க்க

கரூர் பணி ஆணை ரத்து விவகாரம்: `நீதிமன்ற உத்தரவு நகல் வந்தவுடன்...'- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை சீரமைக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை ஐஐடி-யில் மின்சாரத்துறை அமைச்சர், லித்தியம், வெனாடியம் மற்றும் சோடியம் பேட்டரி தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்... மேலும் பார்க்க

மேகதாது: `நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசு; கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா?' - அண்ணாமலை

நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் நாடாளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, "காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கா... மேலும் பார்க்க

நெல்லை: பள்ளி மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் - சாதிய மோதலா? தீவிர விசாரணை!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப... மேலும் பார்க்க

பட்டம் டு தமிழ்த்தாய் வாழ்த்து.! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, இன்று காலை தொடங்குவதற்கும் முன்பே இரண்டு முக்கிய விவகாரங்களால் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பாக ம... மேலும் பார்க்க

பீகார்: 'ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்' மாணவர் போராட்டத்தில் காவலர் கையில் AK-47 - என்ன நடந்தது?

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை எதிர்த்து பீகாரில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) 'பீகார் பந்த்' என்கிற பெயரில் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த ஜூலை 25-ம் தேதி, பீகாரின் சிவான் மாவட்டத்த... மேலும் பார்க்க