செய்திகள் :

மேகதாது விவகாரம்: ``கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில்..."- முதல்வருக்கு உதயநிதி கண்டனம்

post image

தமிழ்நாட்டுக்கும் - கர்நாடகாவுக்கும் மத்தியில் மேகதாது அணை விவகாரம் தீவிரமாகிவருகிறது. இது தொடர்பாக பா.ம.க எம்.பி அன்புமணி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, ``காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, காவிரி கடந்து செல்லும் ஏனைய பிற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை கர்நாடக மாநிலம் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்தப் பதில் மீண்டும் இரு மாநிலகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.

இந்தப் பிரச்னையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமெனச் சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.

கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்தச் சோபா மாடல் முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"ஜந்தர் மந்தர் இளைஞர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்" - நெல்லையில் ஆளுநர் அர்லேகர் பேச்சு

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், "பட்டம் பெறும் அனைத்து... மேலும் பார்க்க

கரூர் பணி ஆணை ரத்து விவகாரம்: `நீதிமன்ற உத்தரவு நகல் வந்தவுடன்...'- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை சீரமைக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை ஐஐடி-யில் மின்சாரத்துறை அமைச்சர், லித்தியம், வெனாடியம் மற்றும் சோடியம் பேட்டரி தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்... மேலும் பார்க்க

மேகதாது: `நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசு; கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா?' - அண்ணாமலை

நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் நாடாளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, "காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கா... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``ஒரு செங்கல்லை வைக்கக்கூட முதல்வர் அனுமதிக்க மாட்டார்" - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக,... மேலும் பார்க்க

நெல்லை: பள்ளி மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் - சாதிய மோதலா? தீவிர விசாரணை!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப... மேலும் பார்க்க

பட்டம் டு தமிழ்த்தாய் வாழ்த்து.! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, இன்று காலை தொடங்குவதற்கும் முன்பே இரண்டு முக்கிய விவகாரங்களால் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பாக ம... மேலும் பார்க்க