செய்திகள் :

மொட்டை அடித்தால் ரூ.15,000; நூதனமாக ஏமாற்றிய கும்பல்; நம்பி தலைமுடியை இழந்த பெண்கள் - விநோத சம்பவம்!

post image

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புதுகொத்தாம்பாடியைச் சேர்ந்த பெண்கள் சிலருக்கு நேற்று முன்தினம் இரவு புது எண்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அழைப்பதாகவும், வெளி நாடுகளில் வேகமாக பரவி வரும் புதுவித நோய் இந்தப் பகுதியில் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறிய அவர்கள், மொட்டை அடித்துக் கொண்டால் நோய் பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளனர். மேலும், மொட்டை அடித்துக்கொள்ளும் ஆண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் பெண்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும் அரசு மூலம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதை உண்மையென நம்பிய மக்கள்,

FRAUD

சலூன் கடைக்காரரை ஊருக்கு வரவழைத்து 3 பெண்கள் மொட்டை அடித்துள்ளனர். மற்றவர்களும் மொட்டை அடித்துக் கொள்ள வரிசையில் நின்றுள்ளனர். பணத்தைக் கொண்டு வருவதாகச் சொன்ன அந்த நபர்களின் செல்போன் திடீரென ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் சந்தேகமடைந்த மக்கள், ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிசா டு திருப்பூர்; AC பெட்டியில் வந்த 30 கிலோ கஞ்சா; துப்பாக்கியுடன் 4 பேர் கைதான பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை சோதனைச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்திச் செல்வதாக பல்லடம் காவல்நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் குழுவாகச் சென்ற க... மேலும் பார்க்க

கடலூர்: காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய கொடூரம்; பயத்தில் இளைஞர் எடுத்த முடிவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், பக்கத்து கிராமத்தில் ஒரு வீட்டுக்கு ஒயரிங் வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டில் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: விபத்து வழக்கில் காரை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாகப் பிடிபட்ட எஸ்.எஸ்.ஐ கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ம் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவலூர் பகுதியைச் சேர்ந்த லட்... மேலும் பார்க்க

"கணவன் என்னை விவாகரத்தே செய்தாலும் அந்தப் பையன்தான் வேணும்" - மனைவி பிடிவாதம்; கணவன் விபரீத முடிவு

சண்டிகரைச் சேர்ந்த மோனு என்பவர் 8 ஆண்டுகளாக கோமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். எட்டு ஆண்டுக்குப் பிறகு இரு குடும்பத்தின் சம்மதத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் ... மேலும் பார்க்க

Uttar Pradesh: பேண்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்; அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த ஆசிரியை

உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகில் உள்ள பண்டேபூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் கேசரி குமார் என்பவரின் 5 வயது மகன் படித்து வந்தான். அவன் வகுப்பறையில் இருக்கும்போது சிறுநீர் கழிக்க வாஷ்ரூம் ச... மேலும் பார்க்க

100 கோடி கேட்டு கடத்தல்... ₹44 கோடியில் முடிந்த பேரம்; மாலியில் விடுவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர வியாபாரி தீரு ரமாணி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக குடும்பத்தினர் சுமார் 4 ... மேலும் பார்க்க