செய்திகள் :

100 கோடி கேட்டு கடத்தல்... ₹44 கோடியில் முடிந்த பேரம்; மாலியில் விடுவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி

post image

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர வியாபாரி தீரு ரமாணி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக குடும்பத்தினர் சுமார் 4 மில்லியன் யூரோ, இந்திய மதிப்பில் சுமார் ₹44 கோடி பணத்தை பேரமாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

75 வயதான தீரு ரமாணி, குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சூரத் நகரின் வைர வர்த்தகத்துடன் நீண்ட காலமாக தொடர்புடைய அவர், பின்னர் தங்கச் சுரங்க முதலீட்டிற்காக மாலியில் தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கடத்தல்காரர்கள் ஆரம்பத்தில் சுமார் ₹100 கோடி பேரம் பேசி கேட்டதாகக் கூறப்படுகிறது.

கடத்தல்

பின்னர் அமெரிக்காவில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ₹44 கோடி வழங்கி விடுதலையை உறுதி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்பட்ட பிறகும் தீரு ரமாணி தற்போது மாலியிலேயே உள்ளார். கடத்தல் மற்றும் விடுதலை தொடர்பான விவரங்கள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், மாலியில் வெளிநாட்டு தொழிலதிபர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய 2 ஆசிரியைகள் - QR Code மூலம் பணம் பெற்ற அதிர்ச்சி பின்னணி!

கேரள மாநிலத்தில் போதைப்பொருட்களை தடுக்கும் நோக்கில் `ஆபரேஷன் தூஃபான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆபரேஷன் தூஃபான் சோதனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிஸ்வான் என்பவரை எம்.டி.எம்.ஏ போதைப்பொரு... மேலும் பார்க்க

சிவகாசி: தகர செட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; 4 பேர் உயிரிழந்த சோகம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வியாபாரம் செய்... மேலும் பார்க்க

தேனி: புறா பிடித்துத் தருவதாகக் கூட்டிச் சென்று 2 சிறுவர்கள் கொடூரக் கொலை; 19 வயது இளைஞர் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”குடும்பபே சின்னாபின்னமாகிடும்” - புகார் அளித்தவரை மிரட்டிய மருத்துவமனை உரிமையாளர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதி அருகே உள்ள நீலகிரி ஊராட்சியின், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த திமுக ஆட்சியின்போது திமுகவில... மேலும் பார்க்க

கேரளம்: தாயின் உடலை 3 நாள்கள் வீட்டில் வைத்து பூஜை; மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் போலீஸ் விசாரணை

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்தூப்புழா கூவக்காடு பகுதியில் உள்ள ஆர்.பி.எல் குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னத்தாம்மாள் (90). அவரது மகன் கிருஷ்ணசுவாமி (60). மனைவியைப் பிரிந்து வாழும் மறுவாழ்வுத... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டால் உயிருக்குப் போராடும் 4 வயது குழந்தை; காஃபி தோட்ட உரிமையாளரின் கொடூரச் செயல்

கூலி சம்பந்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காஃபி தோட்ட உரிமையாளர் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில், 4 வயது குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் சிக்கமகளூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கா... மேலும் பார்க்க