செய்திகள் :

சிவகாசி: தகர செட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; 4 பேர் உயிரிழந்த சோகம்!

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வியாபாரம் செய்யப்பட்டு வந்துள்ளது. மேல் பார்வைக்குத் தண்ணீர் வியாபாரம் நடப்பது போலக் காட்டிவிட்டு, தோட்டத்திற்குள் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

வெடி விபத்து

இங்கு ரகசியமாகப் பட்டாசு தயாரிக்கப்படுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், ராம்பிரகாஷைக் கண்டித்ததுடன் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இருப்பினும், புகாரைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இந்த பயங்கர வெடி விபத்தில் நிகழ்விடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணிகளிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதப் பட்டாசுத் தயாரிப்பால் உரிமையாளர் ராம் பிரசாத் மற்றும் இன்னாசிமுத்து, ஐயப்ப ராஜ், பாண்டிதுரை என 4பேர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி: புறா பிடித்துத் தருவதாகக் கூட்டிச் சென்று 2 சிறுவர்கள் கொடூரக் கொலை; 19 வயது இளைஞர் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”குடும்பபே சின்னாபின்னமாகிடும்” - புகார் அளித்தவரை மிரட்டிய மருத்துவமனை உரிமையாளர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதி அருகே உள்ள நீலகிரி ஊராட்சியின், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த திமுக ஆட்சியின்போது திமுகவில... மேலும் பார்க்க

கேரளம்: தாயின் உடலை 3 நாள்கள் வீட்டில் வைத்து பூஜை; மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் போலீஸ் விசாரணை

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்தூப்புழா கூவக்காடு பகுதியில் உள்ள ஆர்.பி.எல் குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னத்தாம்மாள் (90). அவரது மகன் கிருஷ்ணசுவாமி (60). மனைவியைப் பிரிந்து வாழும் மறுவாழ்வுத... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டால் உயிருக்குப் போராடும் 4 வயது குழந்தை; காஃபி தோட்ட உரிமையாளரின் கொடூரச் செயல்

கூலி சம்பந்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காஃபி தோட்ட உரிமையாளர் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில், 4 வயது குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் சிக்கமகளூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கா... மேலும் பார்க்க

2 வார `டிஜிட்டல்' கைது: போலீஸார் உஷார் செய்த பிறகே ரூ.8 கோடி சைபர் மோசடியை உணர்ந்த 73 வயது முதியவர்

முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் அல்லது அமலாக்கப்பிரிவு... மேலும் பார்க்க

ஹைதராபாத்: `புகார் கூறிய பெண் அதிகாரி என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்...' - உதய்கிருஷ்ணா ஐபிஎஸ்

"என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, பாலியல் புகார் கொடுத்த பயிற்சி அரிகாரி என்னுடன் ஏற்கெனவே ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்தான்" என்று குற்றம்சாட்டப்பட்ட பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு த... மேலும் பார்க்க