செய்திகள் :

'தமிழக அரசின் கடன் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டும்..!'- பாமக வெளியிட்ட உத்தேச பொருளாதார அறிக்கை

post image

பாட்டாளி மக்கள் கட்சி 2025-26 ஆம் ஆண்டிற்கான உத்தேச பொருளாதார அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில்...

1. 2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைந்துள்ளது.

2. சொந்த வரி வருவாய் வரவுகள் ரூ.2,20,895 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், 13% குறைவாக ரூ.1,92,493.07 கோடி மட்டுமே வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

3. தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயின் அங்கங்களான சரக்கு மற்றும் சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி, பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் வரி, மோட்டார் வாகன வரி ஆகியவையும் இலக்கை எட்டவில்லை.

4. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக 10.83% என்ற அளவுக்கு அதிகரித்திருந்தாலும், அதனால் அரசின் வருவாய் எந்த வகையிலும் உயரவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

5. 2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரி அல்லாத வருவாய் ரூ.28,819 கோடியாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருந்தது.

6. ஆனால், ரூ.23,830 கோடி மட்டுமே வரி அல்லாத வருவாயாக கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடும்போது 29.10% குறைவு ஆகும். 2025-26ஆம் ஆண்டுக்கான இலக்குடன் ஒப்பிடும்போது, 17.31% குறைவு ஆகும்.

7. மத்திய அரசின் வரி வருவாய் பங்கு, மானிய உதவி ஆகியவையும் இலக்கைவிட குறைந்ததால் தமிழக அரசின் மொத்த வருவாய் வரவுகளும் குறைந்துள்ளன.

8. 2025-26ஆம் ஆண்டில் ரூ.3,31,569 கோடி தமிழ்நாடு அரசுக்கு மொத்த வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.2,91,219.92 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது இலக்கைவிட ரூ.40,340 கோடி அதாவது 12.17% குறைவு.

செலவுகள் அதிகரிப்பு

9. 2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் மூலதன செலவுகள் அதிகரிக்கவில்லை. அதனால், அரசுக்கும் மக்களுக்கும் பயன்தரும் கட்டமைப்புகள் பெரிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை.

10. அதே நேரத்தில், அரசின் வருவாய் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. மொத்த வருவாய் செலவுகள் ரூ.3,73,204 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.4 லட்சம் கோடியை தாண்டும்.

11. அரசின் வருவாயை அதிகரிக்காதது, செலவுகளைக் கட்டுப்படுத்தாதது ஆகிய இரட்டை தோல்விகளால் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

வருவாய் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்

12. 2025-26ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,635 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதைவிட கிட்டத்தட்ட இரு மடங்காக ரூ.78,000 கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கக் கூடும்.

13. 2026-27ஆம் ஆண்டிலும் வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14. ரூ.6,000 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரத்தின் அளவு 200 யூனிட்டாக அதிகரிப்பு, 717 மதுக்கடைகள் மூடல் ஆகியவை வருவாய்ப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும்.

நிதிப் பற்றாக்குறை குறையாது

15. 2025-26ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.1,06,963 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது ரூ.1,30,000 கோடியை தாண்டும் என தெரிகிறது.

16. 2026-27ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை குறைவதற்கு வாய்ப்பு இல்லை. வருவாய்ப் பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும் என்பதால், ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.1,35,000 கோடியைத் தாண்டும்.

நேரடிக் கடன் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டும்

17. தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் அரசின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2026-27ஆம் ஆண்டின் முடிவில் அரசின் நேரடிக் கடன் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டும்.

18. ஏற்கெனவே வாங்கிய கடனை அடைக்க 2026-27ஆம் ஆண்டு ரூ.60,413.42 கோடியை தமிழக அரசு திரும்ப செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன், ரூ.1.35 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும் என்பதுதான் இதற்குக் காரணம்.

வெள்ளை அறிக்கை வெளியீடு
வெள்ளை அறிக்கை வெளியீடு

19. பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை மின்சார வாரியத்திற்கு மட்டும் ரூ.60,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும்.

20. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2026-27ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் என்பதால், பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த கடன் ரூ.5.75 லட்சம் கோடியாக இருக்கும்.

21. தமிழக அரசின் நேரடிக் கடன், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஆகிய இரண்டையும் சேர்த்தால் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.16.75 லட்சம் கோடியாக இருக்கும்.

ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.8.58 லட்சம் கடன்

22. நடப்பாண்டின் நிறைவில் அரசின் மொத்த கடன் சுமை ரூ.16.70 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்பதால், ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.2,14,743 கடன் இருக்கும். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.8,58,974.35 அரசு கடன் வாங்கியிருக்கும்.

23. தமிழக அரசின் கடன்களுக்காக 2026-27ஆம் ஆண்டில் ரூ.80,000 கோடி வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

24. பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடனுக்காக சுமார் ரூ.48,875 கோடி வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

25. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடனுக்காக ஒட்டுமொத்தமாக, ஆண்டுக்கு ரூ.1,28,875 கோடி வட்டியாக செலுத்த வேண்டியிருக்கும்.

2026-27ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி குறையும்

26. அடுத்தடுத்து இரு ஆண்டுகளில் தமிழக பொருளாதாரம் இரட்டை விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், 2026-27ஆம் ஆண்டிலும் அதே அளவிலான பொருளாதார வளர்ச்சி கிடைக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2026-27ஆம் ஆண்டில் சுமார் 8% என்ற அளவிலேயே இருக்கும்.

27. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், தென்மேற்குப் பருவ மழை பொய்த்த நிலையில், வடகிழக்குப் பருவமழையும் சரியாக பெய்ய வாய்ப்பில்லை என்பதாலும், 2026-27ஆம் ஆண்டில் வேளாண் உற்பத்தி பெருமளவில் குறையும்.

28. சேவைத் துறை, உற்பத்தித் துறை ஆகியவற்றின் வளர்ச்சியும் கடந்த ஆண்டின் வளர்ச்சிக்கு இணையாக இருக்காது என்பதால், தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறையும்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

வாங்கிய கடன் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை

29. உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற மூலதன செலவுகளை மேற்கொள்வதற்காக மட்டுமே கடன் வாங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் இந்த மரபு கடைபிடிக்கப்படவில்லை.

30. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில், ரூ.2.16 லட்சம் கோடி மட்டுமே மூலதனமாக செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2.84 லட்சம் கோடிக்கும் கூடுதலான தொகை வருவாய் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவே செலவிடப்பட்டிருக்கிறது.

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான உத்திகள்

31. ஊதியம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி உள்ளிட்ட பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகளின் அளவை இப்போதுள்ள 61.70 விழுக்காட்டில் இருந்து, 50 விழுக்காட்டுக்கும் கீழ் குறைக்க வேண்டும்.

32. தமிழக அரசின் அனைத்துத் துறைகளுக்குமான நிர்வாகச் செலவுகள் 15% குறைக்கப்படும்.

33. தமிழ்நாட்டிற்குள் முதலமைச்சர் தவிர்த்த பிற அமைச்சர்கள் விமானப் பயணம் மேற்கொள்வது தடை செய்யப்படுகிறது.

34. அமைச்சர்கள், அதிகாரிகள், அரசுத் துறைகள் ஆகியவற்றுக்கு புதிய மகிழுந்துகள் வாங்க தடை விதிக்கப்படுகிறது.

வரி வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள்

35. தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அதன் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 5.93 விழுக்காடாக இருந்தது. இப்போது 5.45 விழுக்காடாக குறைந்துவிட்டது. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 7 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.

36. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 12% முதல் 13% என்ற அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும்.

37. மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கை 50% ஆக உயர்த்தும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

38. மத்திய அரசு வசூலிக்கும் மேல்வரி, கூடுதல் தீர்வை ஆகியவற்றை அடிப்படை வரிகளுடன் இணைக்க வேண்டும். மாநிலங்களின் வருவாய்ப் பங்கை அதிகரிக்கும் நோக்குடன் மேற்குறிப்பிட்ட சீர்திருத்தங்களை செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.

39. மாநில அரசு நிதி வலிமையைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமானால், வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அதன் மூலம் தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தேவையான திட்டங்களை தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக செயல்படுத்த முடியும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி!' - முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா?

காங்கிரஸ் கட்சியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சிக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவிருக்... மேலும் பார்க்க

'CJP' போராட்ட வெற்றிக்குப் பின்னால் இருந்த மூவர்! - யார் அந்த இளைஞர்கள்... அவர்களின் பின்னணி என்ன?

சமூக வலைதளத்தில் வெறும் நகைச்சுவை மற்றும் நையாண்டிப் பக்கமாகத் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பு இன்று நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த மாபெரு... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: `இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது' - உயர் நீதிமன்றக் கிளை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் வழங்கிய பணி ஆணை உத்தரவுகளும் ரத்து செய்யப்படு... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது!' - அமைச்சர்களிடம் முறையிட்ட விவசாயிகள்!

ஆகஸ்ட 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டுக்காக விவசாயிகளிடம் கருத்து கேட்பதான... மேலும் பார்க்க

`தமிழகத்தில் விவசாயக் கடன் அதிகம்; தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை!’ - மத்திய அமைச்சர் சொல்வதென்ன ?

டெல்லியில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டம் ஆகஸ்ட்13-ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், ... மேலும் பார்க்க

`கலாம் ஐயா வழியில் வந்தவன் நான்; ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி; ஆக்., 15-ல் அறிவிப்பு!' - அண்ணாமலை

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், கடந்த 2015-ஆம் ஆண்டு மேகாலாயா மாநிலத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது இயற்கை எய்தினார். அவர் உடல் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்கரும்பு கிர... மேலும் பார்க்க