செய்திகள் :

`கலாம் ஐயா வழியில் வந்தவன் நான்; ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி; ஆக்., 15-ல் அறிவிப்பு!' - அண்ணாமலை

post image

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், கடந்த 2015-ஆம் ஆண்டு மேகாலாயா மாநிலத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது இயற்கை எய்தினார். அவர் உடல் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்கரும்பு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் அப்துல் கலாமிற்கு தேசிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள், நினைவு நாளில் சிறப்பு துவா நடத்தப்படுவது வழக்கம். இது தவிர ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் இங்கு வந்து நினைவிடத்தைப் பார்வையிட்டு செல்கின்றனர். இதுவரை சுமார் 2 கோடி பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.

அப்துல்கலாம் நினைவிடம்

இந்நிலையில் அப்துல் கலாமின் 11-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவரது நினைவிடத்தில் கலாம் குடும்பத்தினர் சிறப்பு துவா நடத்தி மரியாதை செலுத்தினர்.

இதில் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பாளர் அண்ணாமலை, பா.ஜ.க தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் ஜலால் சித்திக், பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், கவுன்சிலர் சங்கர் மற்றும் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், அரசின் சார்பில் கலாம் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகர்மன்றத் தலைவர் நாசர் கான் உள்ளிட்ட தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் அதன் பொறுப்பாசிரியர் தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''அய்யா அப்துல் கலாம் அவர்கள் அரசியலில் நெறிமுறை இருக்க வேண்டும் என கனவு கண்டார். அவரது வழியில் வந்த நான் அவர் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் புதிய அமைப்பினை துவங்கியுள்ளேன். அந்த அமைப்பின் மூலம் அய்யாவின் பிறந்த தினத்தில் புதிய பயிற்சி மையம் ஒன்றை துவக்க உள்ளோம். அதில் வருங்கால மாணவர்களுக்கு அரசியல் நெறிமுறைகளை கற்றுத் ததர உள்ளோம். சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்தப் பயிற்சியினை வழங்க இருக்கிறோம். இதற்கான செயல் திட்டங்கள் குறித்து அக்டோபர் 15 அன்று அறிவிப்பேன்'' என்றார்.

'CJP' போராட்ட வெற்றிக்குப் பின்னால் இருந்த மூவர்! - யார் அந்த இளைஞர்கள்... அவர்களின் பின்னணி என்ன?

சமூக வலைதளத்தில் வெறும் நகைச்சுவை மற்றும் நையாண்டிப் பக்கமாகத் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பு இன்று நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த மாபெரு... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: `இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது' - உயர் நீதிமன்றக் கிளை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் வழங்கிய பணி ஆணை உத்தரவுகளும் ரத்து செய்யப்படு... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது!' - அமைச்சர்களிடம் முறையிட்ட விவசாயிகள்!

ஆகஸ்ட 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டுக்காக விவசாயிகளிடம் கருத்து கேட்பதான... மேலும் பார்க்க

`தமிழகத்தில் விவசாயக் கடன் அதிகம்; தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை!’ - மத்திய அமைச்சர் சொல்வதென்ன ?

டெல்லியில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டம் ஆகஸ்ட்13-ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், ... மேலும் பார்க்க

போர்களில் ஈரானுக்கு உதவும் ரஷ்யா; ரஷ்யாவிற்கு உதவும் ஈரான்: எப்படி? உண்மையை உடைக்கும் ஜெலன்ஸ்கி?

இதுவரை ஒரு பக்கம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது. இன்னொரு பக்கம், அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது. இப்போது ரூட் மாறி உக்ரைனுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல... மேலும் பார்க்க

சீர்காழி: த.வெ.க கொடி கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை - எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே போலீஸ் நிழற்குடை இருந்தது. போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் டிராபிக் போலீஸார் பயன்படுத்துவதற்காக இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடையில் இர... மேலும் பார்க்க