செய்திகள் :

`ராகுல் காந்திக்காக செலவு செய்த பணமே இன்னும் வரவில்லை!’ – ஆடியோவில் வெடித்த மகளிர் காங்கிரஸ் தலைவி

post image

``தேர்தலில் எனக்கு சீட் கொடுக்கவில்லை...!’

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் மகிளா காங்கிரஸ் தலைவர் நிஷா, கட்சி செலவுகள் குறித்துப் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் ஆக்டிவ் தலைவர்களில் ஒருவராக வலம் வரும் நிஷா பேசும் அந்த ஆடியோ, அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த ஆடியோவில் பேசும் நிஷா, ``அனைவருக்கும் வணக்கம். நான் பணம் வாங்கிக் கொண்டு யாருக்கும் கொடுக்காமல், என் பாக்கெட்டில் போட்டுக் கொண்டதாக சிலர் என் மீது வதந்தி பரப்புகிறார்கள். அந்த வதந்திகளை நிறுத்திவிட்டு, அவர்கள் என்னிடம் நேரில் பேச வேண்டும்.

அதேபோல கட்சி செலவுகளுக்காக யாரும் என்னிடம் கொடுத்ததில்லை. நான் மகிளா காங்கிரஸ் தலைவியாவதற்கு முன்பு துணைத் தலைவராக இருந்தபோது, கோலப்போட்டி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் என்னுடைய சொந்தப் பணத்தைத்தான் செலவு செய்தேன்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்துடன் நிஷா

அது ஐந்து லட்சமாக இருந்தாலும் அல்லது ஐம்பது லட்சமாக இருந்தாலும் அனைத்தும் என்னுடைய சொந்த செலவுதான். அப்படி இருக்கும்போது கட்சி எனக்கு ரூ.30 லட்சம் கொடுத்ததாக யாரோ என் மீது தவறான தகவல்களைக் கூறி வருகின்றனர்.

கட்சி என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்ததும், அத்துடன் என் சொந்தப் பணம் ரூ.7 லட்சத்தைப் போட்டு ஆட்களைக் கொண்டு வருவதற்கு செலவு செய்ததும் உண்மை. மேலும் என் பணத்தை எனக்கு திருப்பிக் கொடுங்கள் என்று ஐயாவிடம் (புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்திலிங்கம்) தினம்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதும் உண்மை.

2026 தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு சீட் கொடுக்கவில்லை. அதேபோல சம்பாதிக்கக் கூடிய எந்தவித பதவிகளையும் கட்சி வழங்கவில்லை. நானும் கட்சி மூலமாக ஐந்து பைசா பணத்தைக் கூட சம்பாதிக்கவில்லை.

``கட்சிக்காக சொந்தப் பணத்தை செலவு செய்கிறேன்...”

இன்று வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் என்னுடைய பணத்தைத்தான் செலவு செய்து வருகிறேன். யாரிடமும் பணம் வாங்காமல், ஸ்பான்ஸர்ஷிப் வாங்காமல் நெஞ்சை நிமிர்த்தி மகளிர் காங்கிரஸ் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன். அதனால் உங்களுக்கு தைரியம் இருந்தால், சந்திரிகா அம்மாவிடம் கூறியவர்கள் என்னிடம் நேரில் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல கட்சித் தலைமையிடம் பேசி எனக்கு வர வேண்டிய ரூ.7 லட்சத்தை வாங்கிக் கொடுத்துவிட்டுப் பேசுங்கள். என்னைப் பற்றி பேசுபவர்கள், என் நஷ்டத்தை ஈடுசெய்ய முடியுமா?

தலைவர் ராகுல்காந்தி வந்தபோது மக்களை அழைத்து வந்த பணமே இன்னும் எனக்கு வரவில்லை. பிரசார வாகனங்கள், பிரசாரத்திற்கு வந்த கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கான விடுதிகள் என அனைத்துக்கும் செலவு செய்திருக்கிறேன். இதற்கெல்லாம் யார் பணம் செலவு செய்தது?

ராகுல் காந்தியுடன் நிஷா

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 500 பேர் முதல் 2,000 பேர் வரை என்னுடைய சொந்தப் பணத்தை செலவு செய்து அழைத்து வந்திருக்கிறேன். இதற்கெல்லாம் கட்சி எனக்கு பணம் கொடுத்ததா அல்லது கட்சியின் கிளை அமைப்புத் தலைவர்கள் கொடுத்தார்களா?

அல்லது மகிளா காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கும் நீங்கள் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தீர்களா ? அனைத்து செலவுகளையும் ஒற்றைப் பெண்ணாக நான் செய்திருக்கிறேன்" என்று அந்த ஆடியோ முடிகிறது.

நிஷாவிடம் இதுகுறித்து கேட்டபோது, ``கட்சி கொடுத்த பணத்தை நான் செலவு செய்யவில்லை என்று என் மீது, எங்கள் கட்சி நிர்வாகிகள் சிலரே வதந்தி பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, எங்கள் குழுவில் நான் பகிர்ந்த ஆடியோவை யாரோ சமூக வலைதளத்தில் பரப்பியிருக்கிறார்கள். இது கட்சிக்குள் நடக்கும் ஒரு சாதாரண விவகாரம். இதையும் பெரிதுபடுத்திவிட்டார்கள்" என்றார்.

Houthi Vs சவுதி அரேபியா - மத்திய கிழக்கில் இன்னொரு மோதல்; உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஆபத்து?

ஈரான், அமெரிக்கா போருக்கே இன்னும் விடை தெரியவில்லை. அதற்குள் செங்கடலில் இன்னொரு பெரிய பிரச்னை.ஜூலை 20-ம் தேதி. சவுதி அரேபியா மீது முழுமையான கடற்படை முற்றுகை விதிக்கப்போவதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் அமைப... மேலும் பார்க்க

`24 வயது... ஆதார் அட்டை கூட இல்லை!' - நான்கு ஆண்டுகளாக அலையும் கோவை இளைஞர்

24 வயது, ஆதார் அட்டை இல்லை. வாக்காளர் அட்டை இல்லை. பிறப்புச் சான்றிதழ் இல்லை. இருப்பிடச் சான்றிதழ் இல்லை. அரசின் எந்த அடிப்படை ஆவணமும் இல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு அலுவலகங்களைச் சுற்றி வருகிற... மேலும் பார்க்க

கரப்பான்பூச்சி போராட்டத்தில் த.வெ.க - தி.மு.க-வின் கண்ணாமூச்சி ஆட்டம் - வெளிப்பட்ட பா.ஜ.க ‘பாசம்‘!

தலைநகர் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தை மட்டுமல்ல; தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகள் எங்கே நிற்கின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக் க... மேலும் பார்க்க

'சொந்த நாட்டு மாணவர்களுடனேயே ஆரோக்கியமாக விவாதிக்க முடியாத ஒரு கட்சியிடம்.!' - மாணிக்கம் தாகூர்

"டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கும்" என்று தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டா விஸ... மேலும் பார்க்க

"அவர்கள் அப்படித்தான் பிறக்கிறார்கள்; அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு"- LGBTQ+ குறித்து மோகன் பகவத்

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நேற்று (ஜூலை 26)ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் LGBTQ+ சமுதாயத்தினர் குறித்து பேசியிருக்கிறார்.அவர் பேசியதாவது..."இங்கே சமுதாயத்தில் LGBTQ+ இருக்கிறது தான். சமூகத்... மேலும் பார்க்க