செய்திகள் :

காமன்வெல்த் மேடையில் முத்திரை பதித்த தமிழன்; காயம் `டு' கம்பேக்... சாதித்த ராஜா முத்துப்பாண்டி!

post image

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

27 வயதான ராஜா முத்துப்பாண்டி, ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் தூக்கி, மொத்தம் 286 கிலோ எடையைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்

இந்தப் பிரிவில் மலேசியாவின் அஸ்னில் பிடின் 299 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

ராஜா முத்துப்பாண்டி

ராஜா முத்துப்பாண்டி வென்ற இந்த வெள்ளிப் பதக்கம், அந்த நாளில் இந்தியா பளுதூக்குதலில் வென்ற மூன்றாவது பதக்கம் ஆகும். முன்னதாக மீராபாய் சானு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தையும், ரிஷிகாந்தா சிங் சனம்பம் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் நான்காக உயர்ந்தது.

காயத்திலிருந்து கம்பேக்... வெற்றிக்காகப் போராடிய ராஜா!

இன்று காமன்வெல்த் மேடையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் ராஜா முத்துப்பாண்டியின் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியின்போது, அவரது வலது முழங்கையில் தசைநார் (Ligament) கிழிவு ஏற்பட்டது. அந்தக் காயம் அவரது விளையாட்டு வாழ்க்கையே முடிவுக்கு வரும் அளவுக்கு கடுமையானதாக இருந்தது.

அறுவை சிகிச்சை, நீண்டகால ஓய்வு, மீண்டும் உடலைத் தயார்படுத்தும் கடினமான பயிற்சிகள் என பல சவால்களை எதிர்கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் களமிறங்கி தனது மீள்வரவை பதிவு செய்தார்.

ராஜா முத்துப்பாண்டி

2025... திருப்புமுனையாக மாறிய ஆண்டு!

ராஜா முத்துப்பாண்டியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை 2025-ஆம் ஆண்டில்தான் வந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 296 கிலோ (128 கிலோ ஸ்னாட்ச் + 168 கிலோ கிளீன் & ஜெர்க்) என்ற தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அந்தச் சாதனையே, இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீரர்களில் ஒருவராக அவரை உயர்த்தியது.

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி; ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!

கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி. நேற்று நடைபெற்ற ஆடவர் 65 கிலோ பளுதூக்கு... மேலும் பார்க்க

CWG 2026: "3 நாள் நான் சரியா சாப்பிடல; மாதவிடாய் வலியால்.!'- தங்கம் வென்ற மீராபாய் சானு எமோஷனல்

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தி இருக்கிறார். காமன்வெல்த் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்த மீராபாய் சானுவு... மேலும் பார்க்க

Commonwealth: தொடர்ந்து 3 முறை தங்கப் பதக்கம் வென்று மீராபாய் சாதனை - இந்தியாவுக்கு முதல் தங்கம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார், காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது தங்... மேலும் பார்க்க

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வென்று சாதனை படைத்த அனஹத் சிங்! - யார் இவர்?

கனடாவின் நயாகரா ஆன் தி லேக் நகரில் சனிக்கிழமையன்று 2026 உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில்,எகிப்து வீராங்கனையான ருகையா சேலமை 3-0 என்ற கணக்கில் வீழ... மேலும் பார்க்க

கஷ்டங்களை எட்டி உதைத்த கால்பந்து நாயகர்கள்! - வறுமையையும் தடைகளையும் வென்ற 5 வீரர்களின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஸ்பெயின் வீரரின் கழுத்தை நெரித்த அர்ஜெண்டின வீரர்! - போட்டிக்கு பின் ஆவேச சண்டை!

கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. அர்ஜெண்டினாவை 1-0 என வீழ்த்தி ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களுக்கும் இடையே ந... மேலும் பார்க்க