செய்திகள் :

`தமிழகத்தில் விவசாயக் கடன் அதிகம்; தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை!’ - மத்திய அமைச்சர் சொல்வதென்ன ?

post image

டெல்லியில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டம் ஆகஸ்ட்13-ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், `விவசாயத் துறையில் நிலவும் நெருக்கடி மற்றும் கடன் சுமை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா?

அப்படி என்றால் அதன் விவரங்கள் என்ன? தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகள் கூட்டுறவுப் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கு அத்தகைய நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது உண்மையா? உண்மை என்றால் அதன் விவரங்கள் என்ன?

ரவிக்குமார் எம்.பி

31 மார்ச் 2026 நிலவரப்படி, தேசியமயமாக்கப்பட்ட, பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளிடம் நிலுவையில் உள்ள மொத்த விவசாயக் கடன்களின் விவரங்களை மாநில வாரியாகத் தருக. அதேபோல சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அத்தகைய கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வது அல்லது மறுசீரமைப்பு செய்வது குறித்து பரிசீலிக்க அரசு உத்தேசித்துள்ளதா?’ என இன்று கேள்விகளை எழுப்பினார் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

அதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, ``கடன் நெருக்கடியில் உள்ள, கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி 'அழுத்தத்திற்குள்ளான சொத்துக்களைத் தீர்வு காண்பதற்கான முதன்மை வழிகாட்டுதல்கள் - 2025'-ஐ வெளியிட்டுள்ளது.

இது கடன் வழங்குநர்கள் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நெருக்கடியில் உள்ள கடன் பெற்றவர்களின் கடன்களை நிதி ரீதியாக மறுசீரமைப்பு செய்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கு, கடந்த மூன்று நிதியாண்டுகளில் எந்தவிதமான கடன் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) தெரிவித்துள்ளது.

நபார்டின் (NABARD) 'ENSURE' இணையதளத்தில் வங்கிகள் அளித்துள்ள தகவல்களின்படி, பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள விவசாயக் கடன்களின் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என்று பதிலளித்தார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதையடுத்து எம்.பி ரவிக்குமார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் முதலாளிகள் பெற்ற கடன்கள் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒன்றிய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது.

அமைச்சர் கொடுத்துள்ள பதிலில் உள்ள அட்டவணையில் பார்க்கும்போது தமிழ்நாட்டில் விவசாயிகள் பெற்ற கடன்தான் இந்தியாவிலேயே அதிகமாக உள்ளது. 31.03.2026 நிலவரப்படி தமிழ்நாட்டு விவசாயிகள் பெற்றுள்ள கடன் நிலுவைத் தொகை ரூ.3,44,996.64 கோடி (ரூபாய் மூன்று லட்சத்து நாற்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு கோடி)’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

'CJP' போராட்ட வெற்றிக்குப் பின்னால் இருந்த மூவர்! - யார் அந்த இளைஞர்கள்... அவர்களின் பின்னணி என்ன?

சமூக வலைதளத்தில் வெறும் நகைச்சுவை மற்றும் நையாண்டிப் பக்கமாகத் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற அமைப்பு இன்று நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த மாபெரு... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: `இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது' - உயர் நீதிமன்றக் கிளை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் வழங்கிய பணி ஆணை உத்தரவுகளும் ரத்து செய்யப்படு... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது!' - அமைச்சர்களிடம் முறையிட்ட விவசாயிகள்!

ஆகஸ்ட 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டுக்காக விவசாயிகளிடம் கருத்து கேட்பதான... மேலும் பார்க்க

`கலாம் ஐயா வழியில் வந்தவன் நான்; ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி; ஆக்., 15-ல் அறிவிப்பு!' - அண்ணாமலை

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், கடந்த 2015-ஆம் ஆண்டு மேகாலாயா மாநிலத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது இயற்கை எய்தினார். அவர் உடல் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்கரும்பு கிர... மேலும் பார்க்க

போர்களில் ஈரானுக்கு உதவும் ரஷ்யா; ரஷ்யாவிற்கு உதவும் ஈரான்: எப்படி? உண்மையை உடைக்கும் ஜெலன்ஸ்கி?

இதுவரை ஒரு பக்கம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது. இன்னொரு பக்கம், அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது. இப்போது ரூட் மாறி உக்ரைனுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல... மேலும் பார்க்க

சீர்காழி: த.வெ.க கொடி கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை - எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே போலீஸ் நிழற்குடை இருந்தது. போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் டிராபிக் போலீஸார் பயன்படுத்துவதற்காக இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடையில் இர... மேலும் பார்க்க