செய்திகள் :

கராத்தே பாபு: "ரவி மோகன் சாருடன் பணியாற்றுவது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று"- நெகிழ்ந்த இயக்குநர்

post image

கணேஷ் கே பாபு இயக்​கத்​தில், ரவி மோகன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'கராத்தே பாபு'. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். எழில் அரசு ஒளிப்​ப​திவு செய்​திருக்கிறார்.

அரசி​யல் கதையை கொண்ட இந்​தப் படத்​தில், தமிழ்​நாடு முன்​னாள் காவல்துறை தலைமை இயக்​குநர் சங்​கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறி​முக​மாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்​கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கராத்தே பாபு
கராத்தே பாபு

இந்நிலையில் ரவி மோகனுடன் இணைந்து பணியாற்றியது குறித்து இயக்குநர் கணேஷ் கே பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "சில கனவுகள் நம்மை வந்தடைய பல வருடங்கள் ஆகும். அப்படியான கனவு ஒன்றை நான் நனவாக்கியுள்ளேன்.

ரவி மோகன் சாருடன் இணைந்து பணியாற்றுவது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அவருடன் திரைப்படப் படப்பிடிப்புத் தளத்தைப் பகிர்வது ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றியது. இன்று 'கராத்தே பாபு' திரைப்படத்தில் தனது பயணத்தை அவர் நிறைவு செய்யும் வேளையில், என்னிடம் நன்றியைத் தவிர சொல்ல வேறு ஏதுமில்லை.

அனைவரும் கொண்டாடும் நடிகர் என்பதைத் தாண்டி, அவரை ஒரு மனிதனாக அறிந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது ஒழுக்கம், அடக்கம், பெருந்தன்மை மற்றும் ஒவ்வொரு காட்சியையும் அவர் அணுகும் முறை ஆகியவை எந்தத் திரைப்படக் கல்லூரியும் கற்றுக்கொடுக்க முடியாத பாடங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தன.

கராத்தே பாபு
கராத்தே பாபு

ஒவ்வொரு உரையாடலும், ஒவ்வொரு காட்சியும், படப்பிடிப்புத் தளத்தில் கழித்த ஒவ்வொரு நாளும் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. இந்தப் பயணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில், ஒரு நடிகர் மீதான எனது ஈர்ப்பு அதைவிட மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக மாறியது.

எனக்கு ஒரு மூத்த சகோதரர் கிடைத்தார். 'கராத்தே பாபு' மீது நம்பிக்கை வைத்து, இப்படத்திற்காக உங்கள் இதயத்தை உருகி, உழைத்து, இந்தப் பயணத்தை உண்மையிலேயே மறக்க முடியாததாக மாற்றியமைக்கு நன்றி ரவி மோகன் சார். இந்த நினைவுகளை நான் எப்போதும் போற்றுவேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Jana Nayagan: " அப்படி படம் எடுக்கும் இயக்குநர்கள் தான் உண்மையான படைப்பாளிகள்!" - அ. வினோத்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்காக அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆ... மேலும் பார்க்க

Jana Nayagan: "அப்படி அமைந்தால் மீண்டும் ஒரு ரீமேக் படம் செய்வேன்!" - அ. வினோத்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்காக அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆ... மேலும் பார்க்க

Jana Nayagan: "இந்த சமயத்தில் 'ஜனநாயகன்' படத்தை என்னால் கொண்டாட முடியவில்லை!" - ரேச்சல் ரெபேக்கா

விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அ.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரேச்சல் ரெபேக்காவும் நடித்திருக்கிறார். Jana Nayagan Movieவேல... மேலும் பார்க்க

மாலை வெளியாகும் அப்டேட்; தனுஷ் பாடிய ஓப்பனிங் சாங் - பிறந்தநாள் ஸ்பெஷலாக தனுஷ் கொடுக்கும் ட்ரீட்!

நாளை தனுஷின் பிறந்த நாள். முன்னதாக அவர் தனது பிறந்த நாள் ஸ்பெஷலாக ரசிகர் மன்ற விழாவில் பேசியது வைரலாகி வருகிறது. 'ராயன்', 'கேப்டன் மில்லர்' படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக எழுந்த விமர்சன ச... மேலும் பார்க்க

"90% பேர் விமர்சிக்குறாங்க, அன்னைக்கு 10% பேர் கூட.!"- தேசிய விருது விமர்சனத்துக்கு தனுஷ் பதிலடி

2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72- வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ... மேலும் பார்க்க

Jana Nayagan: "கொசுக்கடி இல்லாம தூங்கணும்னு நினைச்சவர், இப்போ முதல்வர்கூட..." - இரா.சரவணன் பேட்டி

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. எச். வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த கேசர... மேலும் பார்க்க