"கணவன் என்னை விவாகரத்தே செய்தாலும் அந்தப் பையன்தான் வேணும்" - மனைவி பிடிவாதம்; க...
Uttar Pradesh: பேண்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்; அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த ஆசிரியை
உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகில் உள்ள பண்டேபூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் கேசரி குமார் என்பவரின் 5 வயது மகன் படித்து வந்தான்.
அவன் வகுப்பறையில் இருக்கும்போது சிறுநீர் கழிக்க வாஷ்ரூம் செல்ல வேண்டும் என்று ஆசிரியையிடம் கேட்டான். ஆனால் ஆசிரியை அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மாணவன் தனது பேண்டில் சிறுநீர் கழித்தார். உடனே ஆசிரியை அந்த மாணவனை வகுப்பறையில் அடித்துள்ளார்.
அதோடு அவனை வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவனது அந்தரங்க உறுப்பில் சூடான கத்தியால் சூடுவைத்து மீண்டும் அடித்துள்ளார்.
மேலும் இது போன்ற காரியத்தை வகுப்பில் மீண்டும் செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினான்.

உடனே அவனது தந்தை பள்ளிக்கு வந்து எந்த ஆசிரியை இது போன்ற காரியத்தைச் செய்தது என்று மாணவனிடம் அடையாளம் காட்டும்படி கேட்டபோது ஆசிரியை பிரீத்தி குஷ்வாஹா என்பவரை அடையாளம் காட்டினான். இதையடுத்து அந்த ஆசிரியை மீது முறைப்படி மாணவனின் தந்தை கேசவ் குமார் போலீஸில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் சம்பந்தப்பட்ட ஆசிரியை மட்டுமல்லாது பள்ளி பிரின்சிபால் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.



















